தமிழகத்தை சேர்ந்த 22 போலீசாருக்கு குடியரசுத்தலைவர் விருதுகள்

237 0

புதுடெல்லியில் நடைபெறவுள்ள குடியரசு தின விழாவில் தமிழகத்தை சேர்ந்த 22 போலீசாருக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளன.

இந்தியாவின் 68-வது குடியரசு தின விழா வரும் 26-ம்தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இதற்கான விழா ஏற்பாடுகள் தலைநகர் டெல்லியில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்த விழாவில் காவல்துறையில் வீர, தீர சாகசங்களைப் புரிந்த போலீஸ்காரர்களுக்கு குடியரசுத்தலைவர் தனது கைகளால் விருதுகள் வழங்குவார்.

அந்த வகையில் குடியரசு தின விழாவில் விருதுகள் பெறும் போலீஸ்காரர்கள் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த 22 போலீஸ்காரர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.பட்டியலில் ஜனாதிபதியின் சிறப்புமிகு போலீஸ் பதக்கத்தை மதுரையை சேர்ந்த எம். கார்த்திகேயனும் (ஏஎஸ்பி- மதுரை), தஞ்சாவூரை சேர்ந்த வீ. வீராசாமியும்(சப்-இன்ஸ்பெக்டர்) பெறுகின்றனர்.

இதேபோல காவல்துறையின் பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக பணியாற்றிய 2௦ போலீஸ்காரர்களும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கையால் விருது பெறவுள்ளனர். அந்த விவரங்களை கீழே பார்ப்போம்:-

1. யு.மாணிக்கவேல் (அசிஸ்டெண்ட் கமிஷனர் ஆப் போலீஸ் -திருச்சி). 2. என்.குமார் (அசிஸ்டெண்ட் கமிஷனர் ஆப் போலீஸ்- திருவொற்றியூர்) 3.பி.லோகநாதன்(டிஎஸ்பி-சென்னை) 4.சி.பாரதி (டிஎஸ்பி-சென்னை) 5.பி.கண்ணன்( டிஎஸ்பி-கிருஷ்ணகிரி) 6.வி.எழிலரசு(டிஎஸ்பி-விழுப்புரம்) 7.கே.என்.சுதர்சன்(இன்ஸ்பெக்டர்-சென்னை) 8.ஜே.விஜய் ஆனந்த்( இன்ஸ்பெக்டர்-சென்னை)9. என். பிரேமானந்தன்(இன்ஸ்பெக்டர்-கோயமுத்தூர்) 1௦. ஆர். ரகுபதி( இன்ஸ்பெக்டர்- தூத்துக்குடி) 11. எம்.அருள்தாஸ் (இன்ஸ்பெக்டர் -சென்னை) 12. எம்.ரவிச்சந்தர் (இன்ஸ்பெக்டர்-கோயமுத்தூர்) 13.ஆர்.தேவக்குமார்( இன்ஸ்பெக்டர்- சென்னை)14. ஏ.ராஜா( சப்-இன்ஸ்பெக்டர்- சேலம்) 15. எஸ்.ரத்தினம்(சப்-இன்ஸ்பெக்டர்-தஞ்சாவூர்) 16.ஜே.கோபிநாதன்(சப்-இன்ஸ்பெக்டர்- சென்னை) 17. ஜி.கலைவாணன்( சப்-இன்ஸ்பெக்டர்- திருநெல்வேலி)  18.என்.கங்காதரன்( சப்-இன்ஸ்பெக்டர்- சென்னை)19.எஸ். ரெத்தினசாமி( சப்-இன்ஸ்பெக்டர்- தஞ்சாவூர்) 2௦.ஈ.கெங்கண்ணா (சப்-இன்ஸ்பெக்டர்-சென்னை).