கறுப்பு ஜனவரி கொழும்பில் அனுட்டிப்பு!
சிறீலங்காவில் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கும், ஊடகங்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான அடக்குமுறைக்கும் எதிரான கறுப்பு ஜனவரி இன்று கொழும்பில் அனுட்டிக்கப்பட்டது.
சிறீலங்காவில் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கும், ஊடகங்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான அடக்குமுறைக்கும் எதிரான கறுப்பு ஜனவரி இன்று கொழும்பில் அனுட்டிக்கப்பட்டது.
பிள்ளையான் என அழைக்கப்படும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனின் உத்தரவுக்கமையவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டார் என சட்டமா அதிபர் திணைக்களம் உச்சநீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
ஆனையிறவு கொம்படி வெளிப் பகுதியில், எம்ஐ24 உலங்கு வானூர்தியை சுட்டு வீழ்த்தி, 4 விமானப்படையினர் பலியாவதற்குக் காரணமாக இருந்தார் என விடுதலைப்புலிகளின் உறுப்பினர் ஒருவரின் வாக்குமூலத்தை யாழ்ப்பாண மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் இரத்துச் செய்துள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை தொடர்பாக, ஜூரிகள் சபையினால் தீர்மானிக்கப்பட்டு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு, எதிர்ப்புத் தெரிவித்து அவரது மனைவியினால் மேன்முறையீடு செய்யப்பட்ட மனுவை மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
உள்ளூராட்சி தேர்தலில் பெண்கள் எதிர் நோக்கும் சவால்கள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்றையதினம் யாழில் நடைபெற்றுள்ளது.
கடந்த புதன்கிழமை, அதாவது ஜனவரி 18 அன்று இந்தியாவின் புதுடில்லியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில், திருகோணமலை துறைமுகத்தை இந்தியாவிடம் கையளிப்பதற்கான வரையறைகள் தொடர்பாக சிறிலங்காவின் பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா விளக்கமளித்திருந்தார்.
மாணவர்கள் போராட்டத்தில் தடியடி நடத்திய போலீசார் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வைகோ அறிக்கை விடுத்துள்ளார்.
சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன இன்று கேப்பாப்புலவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் கொட்டும் மழையிலும் கேப்பாப்புலவு மக்கள் பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குடியரசு தின விழா நாடு முழுவதும் நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதை சீர்குலைக்கும் வகையில் தீவிரவாதிகள் தரை, ஆகாயம் மற்றும் கடல் வழியாக தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டி உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இயங்கி வரும் அரசு மற்றும் மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு பல்வேறு பணிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அந்த ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பாடம் நடத்த முடியாமலும், அவர்களுக்கு அளிக்கப்பட்ட பல்வேறு பணிகளை முடிக்க முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர்.