உள்ளூராட்சித் தேர்தலில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பாக விழிப்புணர்வுக் கருத்தரங்கு!

275 0

உள்ளூராட்சி தேர்தலில் பெண்கள் எதிர் நோக்கும் சவால்கள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்றையதினம் யாழில் நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வானது இன்றைய தினம் நாடாளுமன்ற பெண்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில்,  ஐ.எப்.இ.எஸ் நிறுவனத்தின் இணை அனுசரணையில் யாழ். ரில்கோ விருந்தினர் மண்டபத்தில் நடைபெற்றது.

தேர்தல் திணைக்களத்தின் எற்பாட்டில் எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் பெண்களின் தலைமைத்துவத்தினை வலுப்படுத்துவது அரசியல் ரீதியான பங்கேற்பு என்னும் கருப்பொருளில்
உள்ளூராட்சிமன்றங்கள், மற்றும் வடமாகாணத்தின் சிவில், சமூக கொண்ட பிரதிநிதிகளுடனான விசேட செயலமர்வு ஒன்று இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

நிகழ்வில் தேர்தல்களில் பெண்கள் எவ்வாறு புறக்கணிக்கப்படுகின்றார்கள், பெண்களின் தலைமைத்துவம் ஏன் தேவை போன்ற விடயங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

மேலும் நிகழ்வில் தேர்தல் ஆணையாளரின் பணிப்பில் வளவாளர்களாக  எம்.எம்.மொஹமட், மோகனகாந் ஆகியோர் கலந்து கொண்டனர். குறித்த நிகழ்வில் சிவில் பெண்கள் அமைப்பின் உறுப்பினர்கள், மாதர் சங்கத்தின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.