அதிர்ஷ்ட லாப சீட்டின் புதிய விலை

Posted by - January 27, 2017

பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் மீண்டும் அதிர்ஷ்ட லாப சீட்டு விலையை 20 ரூபாவாக விற்பனை செய்ய தேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபையும் தீர்மானித்துள்ளது. இதற்கு முன்னர் இதன் விலையை 30 ரூபாவாக அதிகரிக்க நிதியமைச்சு தீர்மானித்த நிலையில், அது தொடர்பாக லொத்தர் சீட்டு முகவர்கள் மற்றும் விற்பனையாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் அதிர்ஷ்ட லாப சீட்டினை இதற்கு முன்னர் இருந்த விலையிலேயே விற்பனை செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

பயங்கரவாத தடை சட்டம் – நீக்கும் நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

Posted by - January 27, 2017

பயங்கரவாத தடை சட்டம் த்தை நீக்கும் நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது. துன்புறுத்தல்களுக்கு எதிரான ஐக்கியநாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் ஜோன் மெண்டிஸ் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த வருடம் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அவர் இலங்கைக்கு விஜயம் செய்து, துன்புறுத்தல்கள் குறித்த ஆய்வுகளை நடத்தி இருந்தார். இலங்கையில் கைதாகின்றவர்கள் துன்புறுத்தப்படும் நிலைமைகள் தொடர்வதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் அரசாங்கம் பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவதற்கான நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும்

அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் நெருக்கடியில்

Posted by - January 27, 2017

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவி ஏற்று, முதல் வாரக் காலப்பகுதியிலேயே, அந்த நாட்டின் ராஜாங்கத் திணைக்களத்தில் உள்ள முக்கிய சிரேஷ்ட்ட அதிகாரிகள் பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜாங்கத் திணைக்களத்தின் நிர்வாகப் பிரிவைச் சேர்ந்த முக்கியஸ்த்தர்கள் பலர் குழுவாக விலகி செல்வதாக கூறப்படுகிறது. அவர்களே ராஜாங்கத் திணைக்களத்தின் சுமுக நகர்வுக்கு காரணமாக இருந்தவர்கள். அவர்களின் பதவி விலகல் புதிதாக ராஜாங்க செயலாளராக பதவி ஏற்கவுள்ள றெக்ஸ் தில்லர்சனுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டொனால்ட் ட்ரம்ப்

இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 20 சத வீத வரி – மெக்சிக்கோ அதிருப்தி

Posted by - January 27, 2017

மெக்சிக்கோவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 20 சத வீத வரியினை அறவிடுவது தொடர்பான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் திட்டத்திற்கு மெக்சிக்கோ அதிருப்தி வெளியிட்டுள்ளது. இந்த வரியின் மூலம் கிடைக்கப்பெறும் நிதியின் உதவியுடன் அமெரிக்கா மற்றும் மெக்சிக்கோவிற்கு இடையேயான எல்லைப் பிராந்தியத்தில் சுவரினை நிர்மாணிக்க டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளதாக வெள்ளை மாளிகையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். மெக்சிக்கோ பொருட்களுக்கு 20 சத வீத வரி விதிக்கப்பட்டால் அமெரிக்க நுகர்வோர் மெக்சிக்கோ பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்க

மன்னிப்பு கேட்பாரா முதல்வர்! – புகழேந்தி தங்கராஜ்

Posted by - January 27, 2017

சென்னையின் ஆகப்பெரிய அழகு அகண்டும் நீண்டும் கிடக்கிற அழகிய கடற்கரை. பட்டும்படாமலும் தொட்டும்தொடாமலும் அந்தப் பெருமணற் பரப்பைத் தாலாட்டிவருகின்றன வங்கக் கடலலைகள். அதே அலைகள் அந்த நீர்க்கோலத்தை அலங்கோலமாக்கிய கொடுமையை ஒரே ஒருமுறைதான் பார்த்திருக்கிறேன். அது 2006 டிசம்பர் 26. வங்கக் கடலலைகள் ஆழிப்பேரலையாக மாறி அந்த அழகிய கடற்கரையைச் சீற்றத்துடன் தாக்கிய நாள். பத்தாண்டுகளுக்கு முந்தைய சுனாமி நினைவைத் தட்டி எழுப்புவதைப் போலவே இருந்தன சென்ற வாரம் அதே கடற்கரையில் அரங்கேறிய தொடர் நிகழ்வுகள். ஆழிப்பேரலை

அரசாங்கம் தேசிய நல்லிணக்கத்துக்கு பங்கம் விளைவிக்கும் சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை- ரங்க கலன்சூரிய

Posted by - January 27, 2017

தேசிய நல்லிணக்கத்துக்கு பங்கம் விளைவிக்கும் சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளது. தேசிய நல்லிணக்கத்துக்கு பங்கம் விளைவிக்கும் சமூக வலைத்தளங்களைக் கட்டுப்படுத்துவதற்கும் சில இணையத்தளங்களுக்குத் தடை விதிக்கவும், அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரங்க கலன்சூரிய தெரிவித்துள்ளார். இணையத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களின் ஊடாக, இனவாதம், மதவாதத்தைத் துண்டும் வகையில் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுவதாக சுட்டிக்காட்டினார். இவ்வாறான நடவடிக்கைகளால் தேசிய நல்லிணக்கத்துக்கு பங்கம் விளைவிக்கும் சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் அதிகளவில் மின் உற்பத்தி- பொறியியலாளர் சங்கம்

Posted by - January 27, 2017

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் அதிகளவில் மின் உற்பத்தி செய்யப்படுவதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. நீர் மின்சாரம் 11 வீதம் வரை வீழ்ச்சியடைந்திருப்பதாகவும், இதன் காரணமாக நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் அதிகளவில் மின் உற்பத்தி செய்யப்படுவதாகவும் இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. மொத்த மின் பயன்பாட்டில் 52 வீதமானவை நுரைச்சோலை அனல் மின் நிலையத்திலிருந்து வழங்கப்படுவதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் அதுல வண்ணியாரச்சி குறிப்பிட்டுள்ளார்.

ஜாலிய விக்கிரமசூரியக்க தொடர்ந்தும் விளக்கமறியல்

Posted by - January 27, 2017

அமெரிக்காவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரியவை, 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு – கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன இன்று உத்தரவிட்டார். அமெரிக்காவுக்கான இலங்கையின் தூதுவராக கடமையாற்றிய காலப்பகுதியில் அரச பணத்தை முறைகேடாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஜாலிய விக்கிரமசூரிய தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுவருகின்றார். குறித்த வழக்கு விசாரணையின் போது, ஜாலிய விக்கிரமசூரிய சார்பில் மன்றில்

தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத யுத்தத்தின் உண்மைகளை வெளிப்படுத்திவிடுவார் என்ற அச்சத்திலேயே ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட காணாமல் ஆக்கப்பட்டார் – விக்ரமபாகு கருணாரத்ன

Posted by - January 27, 2017

நாட்டில் நடைபெற்ற யுத்தத்தின் உண்மைகளை வெளிப்படுத்திவிடுவார் என்ற அச்சத்திலேயே ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட காணாமல் ஆக்கப்பட்டதாக நவசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய விக்ரமபாகு கருணாரத்ன, தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத யுத்தத்தின் உண்மைகளை வெளிப்படுத்துவதற்கு எக்நெலிகொட தயாராக இருந்ததாகவும், யுத்தத்திற்கு எதிராக குரல் எழுப்ப வேண்டுமென்று வலியுறுத்தி வந்ததாகவும் கூறினார். விச வாயுக்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட யுத்தத்தின் உண்மைகளை வெளிப்படுத்திவிடுவார் என்ற அச்சத்திலேயே ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட காணாமல்