ரணில் விக்ரமசிங்க கடுமையான தமிழ் இனவாதி – கலகொட அத்தே ஞானசார தேரர்
பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஓர் கடுமையான தமிழ் இனவாதி என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், பிரதமர் ஓர் கடுமையான தமிழ் இனவாதியாவார். வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரனுக்கும், ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் எவ்வித வேறுபாடுகளும் கிடையாது. நாடு என்ற வாகனத்தை செலுத்தும் பொறுப்பினை ஏற்றுக் கொண்டுள்ள ரணில்

