ட்ரம்பின் அதிரடி தொடர்கிறது – புதிய பதில் சட்டமா அதிபராக டேனா போயன்டே நியமனம்

362 0

அமெரிக்காவின் புதிய பதில் சட்டமா அதிபராக டேனா போயன்டே நியமிக்கப்பட்டுள்ளார்.

டேனா போயன்டே அமெரிக்கா வெஜினியாவின் கிழக்கு மாவட்டத்தில் சட்டத்தரணியாக பணியாற்றி வருபவர்.

இவர் சட்டத்துறையில் 35 வருடங்கள் அனுபவம் கொண்டவராக கருதப்படுகிறார்.

தமது அகதிகள் கொள்கை தொடர்பில் கேள்வி எழுப்பிய அமெரிக்க முன்னாள் பதில் சட்டமா அதிபர் ஷெல்லி யேட்ஸை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவி நீக்கம் செய்தார்.

இதனையடுத்தே புதிய பதில் சட்டமா அதிபாராக டேனா போயன்டே நியமிக்கப்பட்டுள்ளார்.

பதவி நீக்கப்பட்ட முன்னாள் பதில் சட்டமா அதிபர், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் ஆட்சிக்காலத்தில் நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் குறித்த உத்தரவு சட்ட ரீதியானது என தாம் கருதவில்லை என்று, முன்னாள் பதில் சட்ட மா அதிபர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.