திவுலப்பிட்டிய பிரதேச செயலாளருடன் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நடந்து கொண்டது அவரது சுபாவம் எனவும், இதுபோன்ற நடவடிக்கைகளை ஊடகங்கள் வெளியிட்டிருக்கக் கூடாது எனவும் அமைச்சர் எஸ்.பீ. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்கவின் சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.
தன்னிடமுள்ள சகலதையும் பொதுமக்களுக்குப் பெற்றுக் கொடுக்கும் ஒருவராக ரஞ்சன் ராமநாயக்கவை நான் காண்கின்றேன் எனவும் எஸ்.பீ. திஸாநாயக்க மேலும் கூறியுள்ளார்.

