கடும் தீர்மானம் விரைவில் – எச்சரிக்கிறது அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம்

266 0

மாலபே தனியார் மருத்துவ கல்லூரி விடயம் தொடர்பில் கடும் தீர்மானம் ஒன்றை எடுக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் எச்சரித்துள்ளது.

இந்த தீர்மானத்துக்காக எதிர்வரும் வியாழக்கிழமை தமது சம்மேளனம் கூடவுள்ளதாக, சம்மேளனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக மாலபே தனியார் மருத்துவ கல்லூரியிலிருந்து பட்டதாரியாக வெளியேறும் மாணவர்கள் இலங்கை மருத்துவ சபையில் பதிவுசெய்ய கொள்ள முடியும் என இன்று முற்பகல் தீர்ப்பு ஒன்று வழங்கப்பட்டது.

மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த தீர்ப்பை இன்று அறிவித்தது.

மாலபே தனியார் மருத்துவ கல்லூரியில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் இலங்கை மருத்துவ சபையில் பதிவுசெய்வதற்காக விண்ணப்பித்தார்.

அந்த விண்ணப்பம் இலங்கை மருத்துவ சபையால் நிராகரிக்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த மாணவி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்தார்.

சுகாதார அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோர் உள்ளிட்ட 17 பேர் அந்த மனுவில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டனர்.

அந்த மனு மீதான விசாரணையின் முடிவிலேயே இன்று மேன்முறையீட்டு நீதிமன்றம் மாணவிக்கு சார்பான தீர்ப்பை வழங்கியுள்ளது.

இதேவேளை, மாலபே தனியார் கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் நாடளாவிய ரீதியில் போராட்டங்களை முன்னெடுத்த வருகின்றமை குறிப்பிடத்தக்கது.