அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா, தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அகதி கொள்கையை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், அகதிகள் தொடர்பில் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
7 முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவினுள் பிரவேசிப்பதற்காக 90 நாட்களுக்கு தடை விதிக்கும் வகையிலான நிறைவேற்று உத்தரவை டொனால்ட் ட்ரம்ப் கடந்த வாரம் பிறப்பித்திருந்தார்.
இதற்கு சர்வதேச அளவில் கடும் கண்டனங்கள் வெளியாக்கப்பட்டு வருகின்றன
ட்ரம்பின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக உள்நாட்டிலும் பல போராட்டங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையிலேயே, ட்ரம்பின் அகதி கொள்கையை, முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவும், கடுமையாக விமர்சித்துள்ளார்.

