உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் தொழிநுட்ப கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது(காணொளி)

Posted by - February 2, 2017

திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் தொழிநுட்ப கட்டடத்திற்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டது. திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியின் தொழிநுட்ப கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில், பிரதம விருந்தினராக எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் கலந்துகொண்டார். கல்லூரி அதிபர் தமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம், மாகாண கல்விப் பணிப்பாளர், வலயக் கல்விப் பணிப்பாளர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

வடமாகாணத்தை சேர்ந்த இலங்கை போக்குவரத்துச் சபையின் ஏழு சாலைகளின் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு(காணொளி)

Posted by - February 2, 2017

இலங்கை போக்குவரத்துச் சபையின் வடமாகாணத்தை சேர்ந்த ஏழு சாலைகளின் ஊழியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். வவுனியாவில் இலங்கை போக்குவரத்து சாபைக்கென தனியான பஸ்நிலையம் ஒன்று அமையவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே வடமாகாணத்தை சேர்ந்த ஏழு சாலைகளின் ஊழியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பினால் யாழ்ப்பாண மத்தி பேருந்து நிலையம் வெறிச்சோடிக் காணப்படுகிறது.

மாணவர்களது மேலதிக வாசிப்பானது, பரீட்சைகளில் சித்தியடைவதற்கு அத்தியாவசியமானது- க.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - February 2, 2017

மாணவர்களது மேலதிக வாசிப்பானது, பரீட்சைகளில் சித்தியடைவதற்கு அத்தியாவசியமானது என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். கிளிநொச்சி வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயத்தின் ஒரு மாடி வகுப்பறை கட்டிட திறப்பு விழாவில் உரைநிகழ்த்தும் போது இவ்வாறு தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் நகரப்பகுதியில் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தினால் விழிப்பு செயற்பாடு (காணொளி)

Posted by - February 2, 2017

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தினால் யாழ்ப்பாணம் நகரப்பகுதியில் விழிப்பு செயற்பாடொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசியலில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில் குறித்த விழிப்பு செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது விழிப்பு செயற்பாட்டாளர்களால் பொதுமக்களுக்கு துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதுடன் கையெழுத்து வேட்டையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நெடுந்தீவு கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள்  கைது (காணொளி)

Posted by - February 2, 2017

  யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்தனர் என்ற குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்திய மீனவர்களின் படகு ஒன்றும் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து நேற்று இரவு 7 மணியளவில் குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் இந்தியா ஜெகதாபட்டணத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் ஐவரும், கடற்படையினரால் நீரியல் வள திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளநிலையில் இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆயர்ப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயத்தின் ஒரு மாடி வகுப்பறை கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது(காணொளி)

Posted by - February 2, 2017

கிளிநொச்சி வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயத்தின் ஒரு மாடி வகுப்பறை கட்டிடம் இன்று திறந்து வைக்கப்பட்டது. மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியில் அமைக்கப்பட்ட வகுப்பறை கட்டிடத் தொகுதியை வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன்  திறந்து வைத்தார். பாடசாலை அதிபர் அ.பங்கையற்செல்வன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டார். நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான தவநாதன், அரியரத்தினம், பசுபதிபிள்ளை, கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் க.முருகவேல் மற்றும்

போதை பொருளுக்கு எதிரான போராட்டத்தை வீடுகளிலிருந்து தொடங்க வலியுறுத்தல்

Posted by - February 2, 2017

இலங்கையில் போதைப் பொருள் பயன்பாடு சமூகத்தில் வேகமாக பரவி வருவதாக கூறியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதனால் ஏற்படுகின்ற அழிவுகள் யுத்தத்தை விட கூடுதலானது என்று தெரிவித்துள்ளார்.

சேவையில் இருந்து தப்பிச் சென்றவர்களைக் கைதுசெய்யும் நடவடிக்கை தொடர்கிறது

Posted by - February 2, 2017

சேவையில் இருந்து தப்பிச் சென்ற முப்படை உறுப்பினர்களைக் கைதுசெய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, இராணுவம் தெரிவித்துள்ளது.

பெருந்தோட்ட ஆசிரியர் உதவியாளர்களுக்கு 4,000 ரூபா சம்பள அதிகரிப்பு

Posted by - February 2, 2017

மலையக பெருந்தோட்ட ஆசிரியர் உதவியாளர்களுக்கு தற்போது கொடுக்கபடும் 6,000 ரூபாவுடன் மேலும் 4,000 ரூபா அதிகரிப்பை ஏற்படுத்தி 10,000 ரூபாவாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கூறுகின்றார்.