சேவையில் இருந்து தப்பிச் சென்ற முப்படை உறுப்பினர்களைக் கைதுசெய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, இராணுவம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி முதல் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரோஷான் செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, முப்படையில் இருந்து விலகியவர்கள் சேவையில் இருந்து சட்டப்படி வௌியேற கடந்த டிசம்பர் 31ம் திகதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டது.
எனினும் இந்த வாய்ப்பை பயன்படுத்தாது 42,000 பேருக்கும் அதிகமானோர் இருப்பதாக, ரோஷான் செனவிரத்ன சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, கடந்த ஜனவரி தொடக்கம் இதுபோன்று 313 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதற்கமைய கடற்படையில் இருந்து 133 பேரும், விமானப் படையில் இருந்து 11 பேரும் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

