வடமாகாணத்தை சேர்ந்த இலங்கை போக்குவரத்துச் சபையின் ஏழு சாலைகளின் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு(காணொளி)

403 0

இலங்கை போக்குவரத்துச் சபையின் வடமாகாணத்தை சேர்ந்த ஏழு சாலைகளின் ஊழியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியாவில் இலங்கை போக்குவரத்து சாபைக்கென தனியான பஸ்நிலையம் ஒன்று அமையவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே வடமாகாணத்தை சேர்ந்த ஏழு சாலைகளின் ஊழியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பினால் யாழ்ப்பாண மத்தி பேருந்து நிலையம் வெறிச்சோடிக் காணப்படுகிறது.