பெருந்தோட்ட ஆசிரியர் உதவியாளர்களுக்கு 4,000 ரூபா சம்பள அதிகரிப்பு

327 0

மலையக பெருந்தோட்ட ஆசிரியர் உதவியாளர்களுக்கு தற்போது கொடுக்கபடும் 6,000 ரூபாவுடன் மேலும் 4,000 ரூபா அதிகரிப்பை ஏற்படுத்தி 10,000 ரூபாவாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கூறுகின்றார்.

பெருந்தோட்ட ஆசிரியர் உதவியாளர்களுக்கான 05ம் கட்ட நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று (01) கல்வி அமைச்சில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்¸ கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஸ்ணன் ஆகியோர் கலந்துக் கொண்டனர். இதன் போதே மேற்படி கருத்தனை தெரிவித்தார். தொடர்தும் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கருத்து தெரிவிக்கையில்,

தற்போது இவர்களின் கொடுப்பனவை அதிகரிக்க, கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஸ்ணன் அவர்களின் வேண்டுகோளுக்கமைய மேற்கொள்ளபட்டுள்ளது. அதற்கமைய தற்போது கொடுக்கப்படும் 6,000 ரூபாவுடன் மேலும் 4,000 ரூபா அதிகரிப்பை ஏற்படுத்தி 10,000 ரூபாவாக வழங்க நடவடிக்ககை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்பிக்கப்பட்டு உள்ளது. அதற்கான நடவடிக்ககைள் தற்போது நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன. இதற்கு சம்பள நிர்ணய அதிகார சபையின் அனுமதி¸ நிதி அமைச்சின் அனுமதி போன்றவை எடுக்க வேண்டும். அவையும் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன.

அவை அனைத்தும் நடைபெற்றதும் குறுகிய காலத்தில் இவர்களுக்கான கொடுப்பனவு அதிகரிக்கப்படும். இந்த கொடுப்பனவு பிரச்சனை பெருந்தோட்ட ஆசிரியர் உதவியாளர்களுக்கு மாத்திரம் அல்ல. சிங்கள மொழி மூலமான ஆசிரியர் உதவியாளர்களுக்கும் ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் குறைபாடாக இருக்கும் 60,000 ஆசிரியர் குறைபாட்டை எதிர் காலத்தில் நிவர்த்தி செய்வதாகவும், தேசிய பாடசாலைகளில் அதிகமாக காணப்படும் 2000 ஆசிரியர்களை மாகாண பாடசாலைகளுக்கு மாற்றி அனுப்புவதாகவும் கூறினார்.