வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயத்தின் ஒரு மாடி வகுப்பறை கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது(காணொளி)

300 0

கிளிநொச்சி வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயத்தின் ஒரு மாடி வகுப்பறை கட்டிடம் இன்று திறந்து வைக்கப்பட்டது.

மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியில் அமைக்கப்பட்ட வகுப்பறை கட்டிடத் தொகுதியை வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன்  திறந்து வைத்தார்.

பாடசாலை அதிபர் அ.பங்கையற்செல்வன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டார்.

நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான தவநாதன், அரியரத்தினம், பசுபதிபிள்ளை, கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் க.முருகவேல் மற்றும் ஏனைய பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர்.