அமெரிக்காவின் புதிய பாதுகாப்பு செயலாளர் தென்கொரியா பயணம்

Posted by - February 2, 2017

அமெரிக்காவின் புதிய பாதுகாப்பு செயலாளர் ஜெம்ஸ் மாட்டிஸ் தென்கொரியாவுக்காக உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ளார். அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதன் பின்னர், உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயம் மேற்கொள்ளும் உயர் அதிகாரி இவராவார். இதனிடையே, வடகொரியா மற்றும் ஜப்பான் மீது டொனால்ட் ட்ரம்ப் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். அமெரிக்க இராணுவத்தின் ஒத்துழைப்பின் பொருட்டு வடகொரியாவும் ஜப்பானும் வழங்கும் நிதி போதுமானதாக இல்லை என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் இந்த குற்றச்சாட்டை ஜப்பானும் வடகொரியாவும் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேசிய சுதந்திர தின நிகழ்வை புறக்கணிக்குமாறு கோருகிறார் திஸ்ச

Posted by - February 2, 2017

நாளை மறுதினம் இடம்பெறவுள்ள தேசிய சுதந்திர தின நிகழ்வுகளை புறக்கணிக்குமாறு தமது கட்சி பொதுமக்களை கோருவதாக லங்கா சமசமாஜ கட்சி தெரிவித்துள்ளது. கட்சியின் பிரதான செயலாளர் திஸ்ச வித்தாரன இதனை தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அவர் இதனை குறிப்பிட்டார். இந்த அரசாங்கம் கடந்த இரண்டு வருடங்களால் பொருப்பற்ற விதத்தில் செயற்பட்டு வருகின்றது. தொடர்ந்தும் அவ்வாரே செயற்படும். ஆகவே இந்த முறை அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய சுதந்திர தினத்தை புறக்கணிக்குமாறு

தமிழக மீனவர்கள் இலங்கையில் கைது

Posted by - February 2, 2017

தமிழகம் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஐந்து மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து சுமார் 386 படகுகளில் இந்திய கடற்தொழிற்துறை அதிகாரிகளின் அனுமதியுடன் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்கு சென்றுள்ளனர். இவர்களில் ஐந்து பேர் மீன்பிடியில் ஈடுபட்டநிலையில் கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹெரோயின் கடத்தல் – இலங்கையர் உட்பட்ட ஏழு இந்தியர்கள் கைது

Posted by - February 2, 2017

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு ஹெரோயின் கடத்த முற்பட்ட நான்கு இலங்கையர்கள் உட்டபட்ட ஏழு இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய சுங்க திணைக்கள அதிகாரிகளால் இவர்கள் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதன்போது இவர்களிடமிருந்து ஆறு கிலோகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்ட சந்தேகத்திற்குரியவர்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக இந்திய சுங்கவரித்துறையின் அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, மோதரை – கோவில் வீதியில் கோவிலுக்கு அருகில் 2 கிராம் ஹெரோயினுடன் இளைஞர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று கைது செய்யப்பட்ட இந்த

காணாமல் போனோர் விவகாரம் – பொறுப்புக் கூற வேண்டிய கடமை தற்போதைய அரசாங்கத்துக்கும் இருக்கின்றது.

Posted by - February 2, 2017

காணாமல் போனோர் தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டிய கடமை தற்போதைய அரசாங்கத்துக்கும் இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன், ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு இதனைத் தெரிவித்துள்ளார். காணாமல் போனவர்கள் என்பது, இறுதி யுத்தத்தின் பின்னர் இராணுவத்திடம் சரணடைந்தவர்கள், பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்டவர்கள் போன்றவர்களையும் குறிக்கிறது. அவ்வாறானவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் அரசாங்கம் பொதுமக்களுக்கு அறிவிக்க வேண்டும். கைதானவர்களும், சரணடைந்தவர்களும் விடுவிக்கப்படாமல் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல வாய்ப்புகள்

பாதீடுகளில் ஈழத் தமிழர்களுக்கான ஒதுக்கங்களை குறைத்தது இந்தியா

Posted by - February 2, 2017

இந்தியாவின் கடந்த இரண்டு வருடங்களுக்கான பாதீடுகளிலும் ஈழத் தமிழர்களுக்கான ஒதுக்கங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கையில் இடம்பெயர்ந்த மக்களுக்காக இந்தியாவின் வழங்கப்பட்ட உதவிகள், பாதீடுகளில் குறிப்பிடப்பட்டத் தொகையைக் காட்டிலும் மிகவும் குறைவானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது. 2016-2017ஆம் ஆண்டுக்கான பாதீடு நேற்று இந்திய நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. இதில் இலங்கைக்கான நிதி உதவியாக 230 கோடி இந்திய ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. எனினும் இந்த தொகையில் 155 கோடி இந்திய ரூபாய்கள் மாத்திரமே வழங்கப்படவிருப்பதாக

வெளிநாடு முதலீடின்றி அபிவிருத்தி சாத்தியமில்லை!

Posted by - February 2, 2017

நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டுமாயின் வெளிநாட்டு முதலீடுகள் அவசியமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ரொமேனியாவில் அரசாங்க எதிர்ப்பு போராட்டம்

Posted by - February 2, 2017

ரொமேனியாவில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தீவிரமடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நூற்றுக் கணக்கான அதிகாரிகளை விடுவிக்கும் வகையிலான சட்ட மூலம் ஒன்று அந்த நாட்டின் அரசாங்கத்தினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக தலைநகர் புச்சாரெஸ்ட்டில் தொடர் போராட்டங்கள் இடம்பெறுகின்றன. சுமார் ஒன்றரை லட்சம் பேர் வரையில் இந்த போராட்டத்தில் பங்கேற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவிற்கு புதிய ராஜாங்க செயலாளர்

Posted by - February 2, 2017

அமெரிக்காவின் புதிய ராஜாங்க செயலாளராக றெக்ஸ் தில்லர்சன் நியமிக்கப்பட்டுள்ளார். டொனால்ட் ட்ரம்பினால் பரிந்துரைக்கப்பட்டிருந்த அவரை, அமெரிக்க செனட் சபை அங்கீகரித்துள்ளது. இதற்கான வாக்கெடுப்பில் 56 பேர் அவருக்கு ஆதரவளித்ததுடன், 43 பேர் எதிர்ப்பை வெளியிட்டனர். 64 வயதான தில்லர்சன், எக்சொன் மொபில் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் நிறைவேற்று அதிகாரியுமாவார். எவ்வாறாயினும் அவர் இதுவரையில் அரசியல் சார்ந்த எந்த பதவிகளையும் வகித்ததில்லை. மேலும் அவர் ரஷ்யாவுடன் கொண்டிருந்த தொடர்பு குறித்த சர்ச்சையும் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.