அமெரிக்காவின் புதிய பாதுகாப்பு செயலாளர் தென்கொரியா பயணம்

268 0

அமெரிக்காவின் புதிய பாதுகாப்பு செயலாளர் ஜெம்ஸ் மாட்டிஸ் தென்கொரியாவுக்காக உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ளார்.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதன் பின்னர், உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயம் மேற்கொள்ளும் உயர் அதிகாரி இவராவார்.

இதனிடையே, வடகொரியா மற்றும் ஜப்பான் மீது டொனால்ட் ட்ரம்ப் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.

அமெரிக்க இராணுவத்தின் ஒத்துழைப்பின் பொருட்டு வடகொரியாவும் ஜப்பானும் வழங்கும் நிதி போதுமானதாக இல்லை என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் இந்த குற்றச்சாட்டை ஜப்பானும் வடகொரியாவும் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.