வெளிநாடு முதலீடின்றி அபிவிருத்தி சாத்தியமில்லை!

225 0

நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டுமாயின் வெளிநாட்டு முதலீடுகள் அவசியமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சீனா, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகள் துரிதமாக அபிவிருத்தியடைவதற்கு காரணம் அந்த நாடுகளில் பாரிய பிரதேசங்கள் பலவற்றை ஒன்றிணைத்து அபிவிருத்தி மேற்கொள்ளப்பபட்டமையே எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் நேற்று ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,

நாட்டை பிராந்திய அடிப்படையில் அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இளைஞர், யுவதிகளின் வேலையில்லாப் பிரச்சனைக்குத் தீர்வுகாண, திட்டமிட்ட வேலைத்திட்டங்களை அரசாங்கம் அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.

அம்பாந்தோட்டை மாவட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், பிங்கிரிய பிரதேசத்தில் வர்த்தக வலயம் ஒன்றிற்காக 800 ஏக்கர் காணி அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இரணவவில் 500 ஏக்கரில் சுற்றுலாப் பூங்கா அமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்த அவர், இவையனைத்தும் மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டமையினாலேய சாத்தியமாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.