அமெரிக்காவிற்கு புதிய ராஜாங்க செயலாளர்

220 0

அமெரிக்காவின் புதிய ராஜாங்க செயலாளராக றெக்ஸ் தில்லர்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

டொனால்ட் ட்ரம்பினால் பரிந்துரைக்கப்பட்டிருந்த அவரை, அமெரிக்க செனட் சபை அங்கீகரித்துள்ளது.

இதற்கான வாக்கெடுப்பில் 56 பேர் அவருக்கு ஆதரவளித்ததுடன், 43 பேர் எதிர்ப்பை வெளியிட்டனர்.

64 வயதான தில்லர்சன், எக்சொன் மொபில் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் நிறைவேற்று அதிகாரியுமாவார்.

எவ்வாறாயினும் அவர் இதுவரையில் அரசியல் சார்ந்த எந்த பதவிகளையும் வகித்ததில்லை.

மேலும் அவர் ரஷ்யாவுடன் கொண்டிருந்த தொடர்பு குறித்த சர்ச்சையும் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.