காணாமல் போனோர் விவகாரம் – பொறுப்புக் கூற வேண்டிய கடமை தற்போதைய அரசாங்கத்துக்கும் இருக்கின்றது.

274 0

காணாமல் போனோர் தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டிய கடமை தற்போதைய அரசாங்கத்துக்கும் இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன், ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.

காணாமல் போனவர்கள் என்பது, இறுதி யுத்தத்தின் பின்னர் இராணுவத்திடம் சரணடைந்தவர்கள், பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்டவர்கள் போன்றவர்களையும் குறிக்கிறது.

அவ்வாறானவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் அரசாங்கம் பொதுமக்களுக்கு அறிவிக்க வேண்டும்.

கைதானவர்களும், சரணடைந்தவர்களும் விடுவிக்கப்படாமல் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல வாய்ப்புகள் இல்லை.

எனவே அவர்கள் விடுவிக்கப்பட்டிருந்தால் விடுவிக்கப்பட்ட காலம், இடம் உள்ளிட்ட விபரங்களை வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.