பாதீடுகளில் ஈழத் தமிழர்களுக்கான ஒதுக்கங்களை குறைத்தது இந்தியா

500 0

இந்தியாவின் கடந்த இரண்டு வருடங்களுக்கான பாதீடுகளிலும் ஈழத் தமிழர்களுக்கான ஒதுக்கங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கையில் இடம்பெயர்ந்த மக்களுக்காக இந்தியாவின் வழங்கப்பட்ட உதவிகள், பாதீடுகளில் குறிப்பிடப்பட்டத் தொகையைக் காட்டிலும் மிகவும் குறைவானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.

2016-2017ஆம் ஆண்டுக்கான பாதீடு நேற்று இந்திய நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

இதில் இலங்கைக்கான நிதி உதவியாக 230 கோடி இந்திய ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

எனினும் இந்த தொகையில் 155 கோடி இந்திய ரூபாய்கள் மாத்திரமே வழங்கப்படவிருப்பதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டி இருக்கிறது.

இந்த நிதியயே தமிழ்நாட்டில் வசிக்கின்ற ஈழ அகதிகளுக்கான நிவாரண உதவிகளுக்கும் பயன்படுத்தப்படவுள்ளது.

இது தொடர்பில் பல்வேறு தரப்பினரால் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருவதாகவும் குறித்த இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.