யாழ்ப்பாணம் புங்குடு தீவு மாணவி வித்தியாவின் படுகொலையுடன் சம்பந்தப்பட்ட 9 சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - February 8, 2017

  யாழ்ப்பாணம் புங்குடு தீவு மாணவி வித்தியாவின் படுகொலையுடன் சம்பந்தப்பட்ட 9 சந்தேக நபர்களின் விளக்கமறியல் மார்ச் மாதம் 05 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. மாணவியின் படுகொலையுடன் சம்பந்தப்பட்ட 9 சந்தேக நபர்களுக்கும் பிணை வழங்க கோரி யாழ்.மேல் நீதிமன்றில் பிணை மனு தாக்கல் செய்யப்பட்டது. குறித்த வழக்கு விசாரணை இன்று யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி மா. இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது வித்தியாவின் படுகொலையுடன் சம்பந்தப்பட்ட 9 சந்தேக நபர்களும் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.

மோடிக்கு பன்னீர் செல்வம் கடிதம்

Posted by - February 8, 2017

இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தப்பட்டுள்ளார். இது தொடர்பில் தமிழக காபந்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார். நேற்றையதினம் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து 10 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இதன்படி தற்போது இலங்கையில் 35 தமிழக மீனவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் 120 படகுகளும் தடுத்துவைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்குமாறு இந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை குழு அமைக்கப்படும்- ஓ.பன்னீர்செல்வம்

Posted by - February 8, 2017

தமிழகத்தின் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை குழு அமைக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் மீது பகிரங்க குற்றச்சாட்டுகளை நேற்றைய தினம் முன்வைத்தார். சசிகலா தரப்பு தன்னை கட்டாயப்படுத்தி இராஜினாமா செய்ய வைத்ததாக தெரிவித்தமை தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், சசிகலா மீதான எதிர்ப்பு பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக திரும்பியுள்ளது. இந்நிலையில், சென்னையில் உள்ள அவரது வீட்டில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த பன்னீர்செல்வம், அண்ணா

ஊவா மாகாண கல்வித் திணைக்களத்தால் பாடசாலைகளில் நிலவும் தமிழ்மொழி மூல ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை

Posted by - February 8, 2017

  ஊவா மாகாண கல்வித் திணைக்களத்தால் பாடசாலைகளில் நிலவும் தமிழ்மொழி மூல ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பட்டதாரிகள், உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா, வர்த்தகத்துறை டிப்ளோமா ஆகிய துறைகளில் பட்டம் பெற்றவர்கள் இந்த ஆசிரியர் சேவைக்காக விண்ணப்பிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சாதாரண தரத்தில் ஆரம்ப பிரிவு, இஸ்லாம், இந்துசமயம், விவசாயம் மற்றும் உணவு தொழில்நுட்பம், கணிதம், சித்திரம், விஞ்ஞானம், தகவல் தொழில்நுட்பம், வரலாறு ஆகிய பாடங்களை கற்பிப்பதற்கான ஆசிரியர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். உயர்தரத்தில்

யாழ்ப்பாணத்தில் வீதி விபத்துக்கள் – சமிக்ஞைகள் வேண்டும்

Posted by - February 8, 2017

யாழ்ப்பாணத்தில் வீதி விபத்துக்களை குறைக்கும் வகையில் வீதி சமிக்ஞைகளை அமைக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீதி பாதுகாப்பு தேசிய சபையின் தலைவர் சிசிர கொடாகொட இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த 30 ஆண்டுகளாக இடம்பெற்ற மோதல்கள் மற்றும் வீதி சமிக்ஞை குறீயீடுகள் இல்லாமை காரணமாக, வீதி விதிமுறைகள் தொடர்பில் மக்களிடையே போதுமான விழிப்புணர்வு இல்லை. யாழ்ப்பாண குடாநாட்டில் 60 முக்கிய சந்திகள் இருக்கின்றபோதும், மூன்று சந்திகளில் மட்டுமே வீதி சமிக்ஞை குறியீடுகள் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, வீதி

மாலபே விவகாரம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் விரைவில் கூடுகிறது.

Posted by - February 8, 2017

மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொடர்பில் தீர்மானமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்காக எதிர்வரும் 17ஆம் திகதி கலந்துரையாடலொன்று நடத்தப்படவுள்ளது. இந்த நிலையில், மருத்துவர்கள் சங்கத்தின் முகாமைத்துவ குழு, இன்று கூடி ஆர்ம்பக்கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் உயர்நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்வதா? இல்லையா?

ஐக்கிய நாடுகள் சபையின் 14 ஆவது சர்வதேச வெசாக் நிகழ்வுக்கான உத்தியோகபூர்வ இணையத்தளம்(காணொளி)

Posted by - February 8, 2017

  ஐக்கிய நாடுகள் சபையின் 14 ஆவது சர்வதேச வெசாக் நிகழ்வுக்கான உத்தியோகபூர்வ இணையத்தளத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆரம்பித்துவைத்தார். இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 14 ஆவது சர்வதேச வெசாக் கொண்டாட்டம் மற்றும் உலக பௌத்த மாநாட்டை முன்னிட்டு உருவாக்கப்பட்ட உத்தியோகபூர்வ இணையதளம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று ஆரம்பித்துவைக்கப்பட்டது. ஜனாதிபதி செயலகத்தில் நேற்று ஆரம்பித்துவைக்கப்பட்ட இந்த இணையத்தளம் சர்வதேச வெசாக் நிகழ்வு தொடர்பான அனைத்து விடயங்களும் உள்ளடக்கியதாக காணப்படுகின்றது. சமூக

வவுனியா பூந்தோட்டம் நலன்புரி முகாமிலிருந்த குடும்பங்கள் எந்தவொரு மீள்குடியேற்றத் திட்டத்தின் கீழும் செல்ல முன்வரவில்லை – டி.எம்.சுவாமிநாதன்

Posted by - February 8, 2017

வவுனியா பூந்தோட்டம் நலன்புரி முகாமிலிருந்த 97 குடும்பங்கள் எந்தவொரு மீள்குடியேற்றத் திட்டத்தின் கீழும் அங்கிருந்து செல்ல முன்வரவில்லையென அரசாங்கம் தெரிவித்துள்ளது. சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றமற்றும் இந்துசமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் நாடாளுமன்றத்தில் நேற்று இதனைத் தெரிவித்துள்ளார். 1995ஆம் ஆண்டு வடக்கில் இடம்பெற்ற இடப்பெயர்வுடன் அமைக்கப்பட்ட வவுனியா பூந்தோட்ட முகாமில் ஆயிரத்து 249 குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 495 பேர் தங்கியிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், 2011ஆம் ஆண்டின் பின்னர் பூந்தோட்டம் முகாம் மூடப்பட்டது. இதையடுத்து,

வடக்கு மாகாணத்தை சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட 69 மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்(காணொளி)

Posted by - February 8, 2017

நிப்பொன் நிறுவனத்தால் வடக்கு மாகாணத்தை சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட 69 மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் இன்று வழங்கப்பட்டன. யப்பான் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் செயற்படும் நிப்பொன் நிறுவனத்தால் இன்று வடக்கு மாகாணத்தை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 69 மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் வங்கிப்புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் யாழ்ப்பாணம் நாகவிகாரை ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது. நிப்பொன் நிறுவம் 30 வருடங்களுக்கு மேலாக இலங்கையில் கல்வி மற்றும் கலாசாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றது. ஒவ்வொரு வருடமும்

நல்லூர் ஆலயத்துக்கு சொந்தமான வயலில் நெற்கதிர்கள் வெட்டி ஆலயத்துக்கு எடுத்துவரப்பட்டது(காணொளி)

Posted by - February 8, 2017

யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயத்துக்கு சொந்தமான வயலில் நெற்கதிர்கள் வெட்டி இன்றைய தினம் நல்லூர் ஆலயத்துக்கு எடுத்துவரப்பட்டது. தைப்பூச தினத்தை முன்னிட்டு நல்லூர் ஆலயத்துக்கு சொந்தமாக வயலில் விசேட பூஐ வழிபாடுகள் இடம்பெற்று, வயலில் இறங்கி நெற்கதிர்கள் வெட்டி நல்லூர் ஆலயத்துக்கு எடுத்து வரப்பட்டது. இது நல்லூர் ஆலயத்தில் பரம்பரியமாக நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. மண்னில் விதைத்த நெல்லை அறுவடை செய்வதற்கு முன் கந்தனை வணங்கி வயலில் இறங்கி அறுவடை செய்து அந்த நெற்கதிரை கந்தனிற்கு படைத்து பின் பக்தர்களிற்கு