மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொடர்பில் தீர்மானமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்காக எதிர்வரும் 17ஆம் திகதி கலந்துரையாடலொன்று நடத்தப்படவுள்ளது.
இந்த நிலையில், மருத்துவர்கள் சங்கத்தின் முகாமைத்துவ குழு, இன்று கூடி ஆர்ம்பக்கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் உயர்நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்வதா? இல்லையா? என்பது தொடர்பில் மருத்துவ சங்கம் அவதானம் செலுத்திவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

