யாழ்ப்பாணத்தில் வீதி விபத்துக்கள் – சமிக்ஞைகள் வேண்டும்

601 0

யாழ்ப்பாணத்தில் வீதி விபத்துக்களை குறைக்கும் வகையில் வீதி சமிக்ஞைகளை அமைக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீதி பாதுகாப்பு தேசிய சபையின் தலைவர் சிசிர கொடாகொட இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த 30 ஆண்டுகளாக இடம்பெற்ற மோதல்கள் மற்றும் வீதி சமிக்ஞை குறீயீடுகள் இல்லாமை காரணமாக, வீதி விதிமுறைகள் தொடர்பில் மக்களிடையே போதுமான விழிப்புணர்வு இல்லை.

யாழ்ப்பாண குடாநாட்டில் 60 முக்கிய சந்திகள் இருக்கின்றபோதும், மூன்று சந்திகளில் மட்டுமே வீதி சமிக்ஞை குறியீடுகள் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, வீதி விபத்துக்களை குறைப்பதற்காக ஏனைய முக்கிய சந்திகளிலும் வீதி சமிக்ஞை குறியீடுகளை அமைக்க வேண்டும் என வீதி பாதுகாப்பு தேசிய சபையின் தலைவர் சிசிர கொடாகொட தெரிவித்துள்ளார்.