வவுனியா பூந்தோட்டம் நலன்புரி முகாமிலிருந்த குடும்பங்கள் எந்தவொரு மீள்குடியேற்றத் திட்டத்தின் கீழும் செல்ல முன்வரவில்லை – டி.எம்.சுவாமிநாதன்

263 0

வவுனியா பூந்தோட்டம் நலன்புரி முகாமிலிருந்த 97 குடும்பங்கள் எந்தவொரு மீள்குடியேற்றத் திட்டத்தின் கீழும் அங்கிருந்து செல்ல முன்வரவில்லையென அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றமற்றும் இந்துசமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் நாடாளுமன்றத்தில் நேற்று இதனைத் தெரிவித்துள்ளார்.

1995ஆம் ஆண்டு வடக்கில் இடம்பெற்ற இடப்பெயர்வுடன் அமைக்கப்பட்ட வவுனியா பூந்தோட்ட முகாமில் ஆயிரத்து 249 குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 495 பேர் தங்கியிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், 2011ஆம் ஆண்டின் பின்னர் பூந்தோட்டம் முகாம் மூடப்பட்டது.

இதையடுத்து, முகாமிலிருந்த பெரும் எண்ணிக்கையானவர்கள் பல்வேறு மீள்குடியேற்ற திட்டங்களின் கீழ் தமதுசொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்பட்டனர்.

எனினும், 97 குடும்பங்களைச் சேர்ந்த 354 பேர் எந்த மீள்குடியேற்றத் திட்டத்தின் கீழும் தாமாக முன்வந்து மீள்குடியேற முன்வரவில்லை.

அவர்கள் பூந்தோட்டம் முகாமிலிருந்த பகுதிக்கு அண்மித்த பகுதியிலேயே தொடர்ந்தும் இருக்கின்றதாக அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.