சர்வேஸ்வரன் தனது ஆதங்கத்தை வேறு வழியில் வௌிப்படுத்தியிருக்கலாம்!
வடமாகாண சபை உறுப்பினர் சர்வேஸ்வரன் தனது ஆதங்கத்தை வேறு வழியில் வௌிப்படுத்தியிருக்கலாம் என, முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடமாகாண சபை உறுப்பினர் சர்வேஸ்வரன் தனது ஆதங்கத்தை வேறு வழியில் வௌிப்படுத்தியிருக்கலாம் என, முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள குடும்பிமலை (தொப்பிக்கலை) – ஈரக்குலம் காட்டுப் பகுதியில் சட்டவிரோத மரக்கடத்தல் குழு ஒன்று, மாட்டு வண்டியில் சென்று மரங்களை வெட்டிய போது, பொலிசாரை கண்டு, தப்பி ஒடியுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் 47 பேர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்பட வேண்டுமாயின், அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சுப் பதவிகளில் இருந்து நீங்க வேண்டும் என, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி குறிப்பிட்டுள்ளது.
கிந்தோட்டை பகுதியில் வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
புஞ்சி பொரளை – நாலந்த வித்தியாலயத்திற்கு அருகில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
காலி – கிந்தோட்டை பகுதியில் இடம்பெற்ற குழப்பநிலையின் போது, சேதமாக்கப்பட்ட அனைத்து சொத்துக்களுக்கும் அரசாங்கத்தினால் நஸ்டஈடு வழங்கப்படும் என, அமைச்சர் வஜிர அபேவர்த்த குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கில் தனித்துப் போட்டியிட முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. அக் கட்சியின் செயலாளர் நிஷாம் காரியப்பர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஏனைய மாவட்டங்களில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட முன்னதாகவே முடிவு செய்யப்பட்டுள்ளது. எதுஎவ்வாறு இருப்பினும், விரைவில் நடைபெறவுள்ள கூட்டத்தில் இது குறித்த இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என நிஷாம் காரியப்பர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களால்2017ம் ஆண்டிற்குரிய பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை(CBG) நிதியில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட பயனாளர்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களால் வறிய குடும்பங்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்குடன் 2017ம் ஆண்டிற்குரிய பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை(CBG) நிதியிலிருந்து, சாவகச்சேரி மற்றும் மீசாலை பகுதிகளைச் சேர்ந்த பயனாளிகளுக்கு 15.11.2017 அன்று மாடுகள் வழங்கப்பட்டுள்ளது. இதே போன்று சாவகச்சேரியை சேர்ந்த குடும்பத்திற்கும் கோழி வளர்ப்பிற்கான உதவி
முன்னைய ஆட்சியின் போது திறைசேரி செயலாளர் மற்றும் மத்திய வங்கி ஆளுநர் ஆகியோர் செய்த பாவத்தையே நாம் போக்கி வருகின்றோம்.