மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களால் வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளது!

475 0

மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களால்2017ம் ஆண்டிற்குரிய பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை(CBG) நிதியில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட பயனாளர்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களால் வறிய குடும்பங்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்குடன் 2017ம் ஆண்டிற்குரிய பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை(CBG) நிதியிலிருந்து, சாவகச்சேரி மற்றும் மீசாலை பகுதிகளைச் சேர்ந்த பயனாளிகளுக்கு 15.11.2017 அன்று மாடுகள் வழங்கப்பட்டுள்ளது.

இதே போன்று சாவகச்சேரியை சேர்ந்த குடும்பத்திற்கும் கோழி வளர்ப்பிற்கான உதவி வழங்கப்பட்டது. சாவகச்சேரி கால்நடை வைத்தியசாலை வளாகத்தில் 15.11.2017 அன்று நடைபெற்ற இந்நிகழ்வில் கோழிக்குஞ்சுகள், கோழிக்கூடு மற்றும் கோழித் தீவன உபகரனங்கள் என்பன அமைச்சரால் வழங்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலியைச் சேர்ந்த குடும்பம் ஒன்றிற்கு கோழி வளர்ப்பதற்கான உதவித் தொகை காசோலையாக வழங்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி அரச கால்நடை வைத்தியசாலை வளாகத்தில் வைத்து 16.11.2017 அன்றுமகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களால் வழங்கப்பட்டுள்ளது.

Leave a comment