தமிழ் மக்கள் பேரவை அரசியல் கட்சியாக ……

Posted by - February 14, 2017

தமிழ் மக்கள் பேரவையை அரசியல் கட்சியாக மாற்ற வேண்டிய தேவை எதிர்காலத்தில் இருப்பின் அது தொடர்பில் தமிழ் மக்கள் பேரவையின் பிரதிநி்திகளுடன் கதைத்து தீர்மானம் எடுக்கலாம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பொ.கஜேந்திரகுமார் தெரிவித்தார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.குறித்த ஊடக சந்திப்பில் தமிழ் தலைமைகளுக்கு ஏற்ற பிரதிநிதிகள் தற்பொழுது இல்லை எனவே தமிழ் மக்கள் பேரவை அதனை நிறைவேற்றுமா என ஊடகவியலாளர்கள்

யாழ் ஸ்ரான்லி வீதியில் விபத்து மூவர் காயம்

Posted by - February 14, 2017

யாழ் ஸ்ரான்லி வீதியில் முச்சக்கரவண்டியும் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான கன்ரர் ரக வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து சம்பவத்தில் மூன்று பேர் சம்பவ இடத்தில்  காயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது. சம்பவத்தில் ஆட்டோ சாரதி கன்ரர் வாகனத்தை முந்திக்கொண்டு செல்ல முற்பட்டவேளையில்  அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் சொந்தமான வாகனத்தில் மோதியதால் இவ் விபத்து எற்பட்டுள்ளது.என்று ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவருகின்றது. இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் யாழ் பொலீசாரால்  மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. விபத்தில் காயமடைந்தவர்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக

சட்டமியற்றுபவர்களாக இருக்க வேண்டியவர்கள் சாதாரணமாக தேநீர் ஊற்றுபவர்கள் போலவே செயற்படுகின்றனர்!

Posted by - February 14, 2017

இலங்கை மத்திய வங்கியின் நம்பிக்கை, ரூபாவின் நம்பிக்கை மற்றும் கடன், சீட்டிழுப்பு, ஏனைய அரச திணைக்களங்களின் நம்பிக்கை போன்ற விடயங்கள் அரசாங்கத்தின் நிதியமைச்சில் இடம்பெற்று வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

100 வீரவங்சக்கள் உருவாகி வருவார்கள் : பிரசன்ன ரணதுங்க

Posted by - February 14, 2017

ஒரு வீரவங்சவின் குரலை அடக்கும் போது 100 வீரவங்சக்கள் உருவாகி வருவார்கள் என்பதை தற்போதைய அரசாங்கம் உணர்ந்து கொள்ள வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

மக்கள் போராட்டம் வென்றது! காணிகளை விடுவிக்க ஜனாதிபதி நடவடிக்கை

Posted by - February 14, 2017

எமது காணிகளுக்குள், செல்ல அனுமதிக்கப்பட்ட பின்னரே நாங்கள் போராட்டத்தைகைவிடுவோம் என தற்போது தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்பிலவு மக்கள்முல்லைத்தீவு மாவட்டச் செயலர் ரூபவதி கேதீஸ்வரனிடம் செவ்வாய்க்கிழமை (14)தெரிவித்துள்ளனர்.

சட்டமா அதிபர் பக்கசார்பானவர்: மேஜர் அஜித் பிரசன்ன

Posted by - February 14, 2017

சட்டமா அதிபர் பக்கசார்பாக செயற்பட்டு வருவதாக கூறி தாய்நாட்டுக்கான படையினர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஓய்வுபெற்ற மேஜரான சட்டத்தரணி அஜித் பிரசன்ன உயர்நீதிமன்றத்தில் இன்று மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

ஐரோப்பிய சங்க உறுப்பினர் வடக்கு விஜயம்

Posted by - February 14, 2017

ஐரோப்பிய சங்கத்தின் பிரதிநிதிகள் குழுவின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான தூதுவர் டுங்-லாய் மாக் எதிர்வரும் மூன்று தினங்களுக்கு வட பிராந்தியத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வறட்சியால் 14 மாவட்டங்கள் பாதிப்பு

Posted by - February 14, 2017

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக 14 மாவட்டங்களுக்கு தாக்கம் ஏற்பட்டுள்ளது. அனுராதபுரம், கிளிநொச்சி, கம்பஹா, ஹம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், குருணாகலை, மொனராகலை, புத்தளம், முல்லைத்தீவு, ரத்தினபுரி, திருக்கோணமலை, கண்டி, வவுனியா கேகாலை உள்ளிட்ட மாவட்டங்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளன. குறித்த மாவட்டங்களில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 4 லட்சத்து 93 ஆயிரம் பேர் குடிநீர் பற்றாக்குறைக்கு முகம் கொடுத்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அவர்களுக்கான குடிநீர் தேவைப்பாடுகளை பூர்த்தி செய்யும் வகையில்

மாணிக்கக் கல் அகழ்ந்த ஐவர் சிக்கினர்

Posted by - February 14, 2017

பொகவந்தலாவ – கெசல்கமுவ ஆற்றிற்கு அருகாமையில் டின்சின் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக் கல் அகழ்ந்து கொண்டிருந்த ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பிழைகளை திருத்தாது தேர்தல் நடத்துவது முறையற்றது

Posted by - February 14, 2017

உள்ளுராட்சி சபைகளில் ஊழலுக்கு வழிவகுக்கும் பிழையான செயற்பாடுகளை சரிசெய்யாது தேர்தல் ஒன்றை நடத்துவதன் ஊடாக பொதுமக்கள மீண்டும் ஒரு சேவையை எதிர்பார்க்க முடியாது என அமைச்சர் பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.