ஐரோப்பிய சங்க உறுப்பினர் வடக்கு விஜயம்

232 0

ஐரோப்பிய சங்கத்தின் பிரதிநிதிகள் குழுவின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான தூதுவர் டுங்-லாய் மாக் எதிர்வரும் மூன்று தினங்களுக்கு வட பிராந்தியத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தூதுவர் மாக், ஐக்கிய நாடுகளின் வதிவிட இணைப்பாளர் ஊனா மெகோலி ஆகியோர் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சந்திக்கவுள்ளனர்.

அதன்பின்னர் அவர்கள் இருவரும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவுடன் இடம்பெறும் மாவட்ட அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் (EU-SDDP) ஒருகட்டமாக இடம்பெறும் செயற்றிட்டங்களை பார்வையிடுவதற்காக வவுனியாவுக்கு செல்லவுள்ளனர்.

கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்தில் மகளிர் மற்றும் சிறார்களுக்கான கருமபீடத்தை திறந்துவைத்தல், மாவட்ட செயலாளர் காரியாலயத்தில் அமைந்துள்ள பொது தொழில்வாய்ப்பு மையத்தை கண்காணித்தல், நெலுங்குளத்தில் அமைந்துள்ள தொழிற்கல்வி மற்றும் பயிற்சி வழங்கும் திணைக்களத்துக்குட்பட்ட தொழினுட்ப கல்லூரிக்கு உபகரணங்களை வழங்கல்.

வவுனியா பொது மருத்துவமனையில் கழிவகற்றல் மற்றும் கழிவு நீரகற்றல் நிலையத்தை திறந்துவைத்தல், பொருளாதார மத்திய நிலையம் என்பவற்றை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வுகள் எதிர்வரும் தினங்களில் இடம்பெறவுள்ளன.