தமிழ் மக்கள் பேரவையை அரசியல் கட்சியாக மாற்ற வேண்டிய தேவை எதிர்காலத்தில் இருப்பின் அது தொடர்பில் தமிழ் மக்கள் பேரவையின் பிரதிநி்திகளுடன் கதைத்து தீர்மானம் எடுக்கலாம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பொ.கஜேந்திரகுமார் தெரிவித்தார்.தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.குறித்த ஊடக சந்திப்பில் தமிழ் தலைமைகளுக்கு ஏற்ற பிரதிநிதிகள் தற்பொழுது இல்லை எனவே தமிழ் மக்கள் பேரவை அதனை நிறைவேற்றுமா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் அங்கு தெரிவிக்கையில்,
தமிழ் மக்கள் பேரவைகுள்ளே சில அரசியல் கட்சிகள் இணைந்துள்ளன.ஆகவே அந்த அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் அந்தப் பொறுப்பை ஏற்க வேண்டும்.பொதுவாக தமிழ் மக்கள் பேரவை ஆரம்பிக்கப்படும் போது அரசியல் கட்சியல்ல என்ற நோக்குடனேயே ஆரம்பிக்கப்பட்டது.மக்களுக்கு உரிய பிரதிநிதிகள் இல்லை.மக்களுக்கு பிரதிநிதிகள் தேவைப்படுகின்றனர் என தோன்றும் பட்சத்தில் தமிழ் மக்கள் பேரவையை அரசியல் கட்சியாக மாற்றுவது தொடர்பில் நிச்சயமாக பேரவையின் பிரதிநிதிகளுடன் ஆலோசிக்கப்படும்.அத்துடன் பேரவைக்குள்ளேயே உள்ள அரசியல் கட்சிகளேதான் இதனை பொறுப்பை எடுக்க வேண்டும்.
தமிழ் மக்கள் பேரவை அரசியல் கட்சியாக வேண்டும் என உருவாக்கப்படவில்லை.பேரவை தற்பொழுது அரசியல் கட்சியாகவும் இல்லை.அதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.ஆனால் மக்கள் எங்களுக்கு ஏற்ற தலைமை எதுவும் இல்லை தமிழ் மக்கள் பேரவைதான் பிரதிநிதிகளாக வரவேண்டும்.விசேடமாக கிழக்குமாகாணத்தை பொறுத்தவரையில் உரிய தலைமைகள் இல்லை என்பதை ஏற்றுக் கொள்ளலாம்.அந்த தேவையை பேரவையாவது நிறைவேற்ற வேண்டும் என எண்ணினால் நிச்சயமாக அதனை பரிசீலிக்கலாம் என்றார்.
தமிழ் மக்கள் பேரவையை அரசியல் கட்சியாக மாற்ற வேண்டிய தேவை எதிர்காலத்தில் இருப்பின் அது தொடர்பில் தமிழ் மக்கள் பேரவையின் பிரதிந்திகளுடன் கதைத்து தீர்மானம் எடுக்கலாம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பொ.கஜேந்திரகுமார் தெரிவித்தார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.குறித்த ஊடக சந்திப்பில் தமிழ் தலைமைகளுக்கு ஏற்ற பிரதிநிதிகள் தற்பொழுது இல்லை எனவே தமிழ் மக்கள் பேரவை அதனை நிறைவேற்றுமா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் அங்கு தெரிவிக்கையில்,
தமிழ் மக்கள் பேரவைகுள்ளே சில அரசியல் கட்சிகள் இணைந்துள்ளன.ஆகவே அந்த அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் அந்தப் பொறுப்பை ஏற்க வேண்டும்.பொதுவாக தமிழ் மக்கள் பேரவை ஆரம்பிக்கப்படும் போது அரசியல் கட்சியல்ல என்ற நோக்குடனேயே ஆரம்பிக்கப்பட்டது.மக்களுக்கு உரிய பிரதிநிதிகள் இல்லை.மக்களுக்கு பிரதிநிதிகள் தேவைப்படுகின்றனர் என தோன்றும் பட்சத்தில் தமிழ் மக்கள் பேரவையை அரசியல் கட்சியாக மாற்றுவது தொடர்பில் நிச்சயமாக பேரவையின் பிரதிநிதிகளுடன் ஆலோசிக்கப்படும்.அத்துடன் பேரவைக்குள்ளேயே உள்ள அரசியல் கட்சிகளேதான் இதனை பொறுப்பை எடுக்க வேண்டும்.
தமிழ் மக்கள் பேரவை ரசியல் கட்சியாக வேண்டும் என உருவாக்கப்படவில்லை.பேரவை தற்பொழுது அரசியல் கட்சியாகவும் இல்லை.அதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.ஆனால் மக்கள் எங்களுக்கு ஏற்ற தலைமை எதுவும் இல்லை தமிழ் மக்கள் பேரவைதான் பிரதிநிதிகளாக வரவேண்டும்.விசேடமாக கிழக்குமாகாணத்தை பொறுத்தவரையில் உரிய தலைமைகள் இல்லை என்பதை ஏற்றுக் கொள்ளலாம்.அந்த தேவையை பேரவையாவது நிறைவேற்ற வேண்டும் என எண்ணினால் நிச்சயமாக அதனை பரிசீலிக்கலாம் என்றார்.