வறட்சியால் 14 மாவட்டங்கள் பாதிப்பு

24 0
நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக 14 மாவட்டங்களுக்கு தாக்கம் ஏற்பட்டுள்ளது.

அனுராதபுரம், கிளிநொச்சி, கம்பஹா, ஹம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், குருணாகலை, மொனராகலை, புத்தளம், முல்லைத்தீவு, ரத்தினபுரி, திருக்கோணமலை, கண்டி, வவுனியா கேகாலை உள்ளிட்ட மாவட்டங்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளன.

குறித்த மாவட்டங்களில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 4 லட்சத்து 93 ஆயிரம் பேர் குடிநீர் பற்றாக்குறைக்கு முகம் கொடுத்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அவர்களுக்கான குடிநீர் தேவைப்பாடுகளை பூர்த்தி செய்யும் வகையில் நீர்த்தாங்கி வாகனங்கள, பாரவூர்திகள், உழவு இயந்திரங்கள் என்பவற்றின் மூலமாக தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வறட்சி காலநிலை காரணமாக நீர்தேக்கங்களில் நீர்மட்டம் பாரிய அளவில் குறைவடைந்துள்ளது.