யாழ் ஸ்ரான்லி வீதியில் முச்சக்கரவண்டியும் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான கன்ரர் ரக வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து சம்பவத்தில் மூன்று பேர் சம்பவ இடத்தில் காயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது. சம்பவத்தில் ஆட்டோ சாரதி கன்ரர் வாகனத்தை முந்திக்கொண்டு செல்ல முற்பட்டவேளையில் அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் சொந்தமான வாகனத்தில் மோதியதால் இவ் விபத்து எற்பட்டுள்ளது.என்று ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவருகின்றது. இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் யாழ் பொலீசாரால் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. விபத்தில் காயமடைந்தவர்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

