சட்டமியற்றுபவர்களாக இருக்க வேண்டியவர்கள் சாதாரணமாக தேநீர் ஊற்றுபவர்கள் போலவே செயற்படுகின்றனர்!

262 0

இலங்கை மத்திய வங்கியின் நம்பிக்கை, ரூபாவின் நம்பிக்கை மற்றும் கடன், சீட்டிழுப்பு, ஏனைய அரச திணைக்களங்களின் நம்பிக்கை போன்ற விடயங்கள் அரசாங்கத்தின் நிதியமைச்சில் இடம்பெற்று வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகச்சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிலையில் நம்பிகையில்லா பிரேரணை நிதியமைச்சருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட போதிலும் அது தோல்வியுற்றதே இந்த நிலை ஏற்பட காரணமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்களால் தெரிவு செய்யப்பட்டு சட்டமியற்றுபவர்களாக இருக்க வேண்டியவர்கள் சாதாரணமாக தேநீர் ஊற்றுபவர்கள் போலவே செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் சீட்டிழுப்பு அதிர்ஷ்டலாப சீட்டு அச்சிடுகையில் ஒரே இலக்கம் மூன்று அச்சிடப்பட்டுள்ளது. இவற்றுள் 20, 30 ரூபா விலைகள் குறிப்பிடப்படாமலும் அச்சிடப்பட்டுள்ளது.

இவ்விடயம் குறித்த அரச நிறுவனத்துக்கு பாரிய நட்டத்தினை ஏற்படுத்தும் ஒன்றாகும்.

இதனால் ஜனாதிபதியே இதற்கு தலையிட்டு முடிவெடுக்க வேண்டிய தேவைக் காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.