இந்தியாவில் தத்தெடுத்த குழந்தையை கொன்ற தந்தை குப்பை பையில் தூக்கிச் சென்றது அம்பலம்

Posted by - December 7, 2017

அமெரிக்காவின் டெக்சாஸில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட இந்திய சிறுமி ஷெரின் மேத்யூஸின் உடலை அவரது தந்தை குப்பை பையில் தூக்கிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாயமான மீனவர்களை மீட்கக்கோரி 5 ஆயிரம் பேர் பேரணி

Posted by - December 7, 2017

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒக்கி புயலில் சிக்கி மாயமான மீனவர்களை மீட்கக்கோரி கருப்பு கொடியுடன் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் ஒப்பந்த ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

Posted by - December 7, 2017

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் இன்று சம்பள உயர்வு கேட்டு ஒப்பந்த ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பணிகள் பாதிக்கப்பட்டதால் நோயாளிகள் தவிப்புக்கு உள்ளாகினர்.

10-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை: ராமேசுவரத்தில் ரூ. 25 கோடி வர்த்தகம் பாதிப்பு

Posted by - December 7, 2017

புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை 10-வது நாளாக நீடிக்கிறது. இதனால் ராமேசுவரத்தில் ரூ. 25 கோடி அளவுக்கு மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

பரோல் கேட்டு தமிழக அரசை எதிர்த்து நளினி ஐகோர்ட்டில் மனு

Posted by - December 7, 2017

நளினி தனது மகள் திருமணத்துக்காக பரோல் கேட்ட வழக்கில், தமிழக அரசு அளித்த பதில் மனுவுக்கு எதிராக நளினி சார்பில் இன்று சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்படுகிறது.

கட்சியையும், ஆட்சியையும் தினகரன் கைப்பற்றுவார்: தங்க தமிழ்செல்வன்

Posted by - December 7, 2017

ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. கட்சியையும், ஆட்சியையும் தினகரன் கைப்பற்றுவார் என்று தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளார்.

தமிழ் தேசிய பேரவை என்ற பெயரில் புதிய கூட்டமைப்பு!

Posted by - December 7, 2017

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைமையில் நேற்று மற்றொரு புதிய அரசியல் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய பேரவை என்று பெயரில் இந்தப் புதிய அரசியல் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மண்ணுறங்கும் மாவீரத்தை சாட்சியாக்கி இடித்துரைக்கப்பட்டிருக்கும் சுதந்திர தமிழீழ பிரகடனம்! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

Posted by - December 6, 2017

December 05. 2017 Norway இந்த ஆண்டிற்கான தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் குறிப்பாக தாயகத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வுகள் மூலம் மண்ணுறங்கும் மாவீரத்தை சாட்சியாக்கி சுதந்திர தமிழீழ பிரகடனம் இடித்துரைக்கப்பட்டுள்ளது. நவம்பர்-26 மற்றும் நவம்பர்-27 ஆகிய இரு நாட்களும் நேர் முரண் நிலைகொண்ட எழுச்சி நாட்களாக உலகத் தமிழர்களால் கொண்டாடப்பட்டு வந்த நிலையில் ஆயுத மௌனிப்பின் பின்னர் மெல்ல மெல்ல சோபை இழக்கும் நிலையேற்பட்டிருந்தது. இராணுவ அச்சுறுத்தல் மற்றும் முள்ளிவாய்க்கால் பேரழிவு ஏற்படுத்திய உளச்சோர்வு

வடக்கு கிழக்கில் முப்படையினர் தயார் நிலையில்

Posted by - December 6, 2017

வடக்கு கிழக்கில் அசாதாரண நிலையை எதிர்வு கொள்ளக்கூடிய தயார் நிலையில் முப்படையினரும் இருப்பதாக இராணுவப்பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரொசான் செனவிரத்ன தெரிவித்தார். இன்று நண்பகல் வரையில் சீரற்ற காலநிலையினால் எந்தவித அனர்த்த நிலையும் ஏற்பட்டதாக தகவல் இல்லை என்று அவர் குறிப்பிட்டார். வடக்கு கிழக்கில் சீரற்ற காலநிலை தொடர்பான முன்னேற்பாடுகள் தொடர்பில் கேட்டபோதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.