Breaking News
Home / கட்டுரை (page 4)

கட்டுரை

அனந்தி சசிதரன் எழுப்பியிருக்கும் கலகக்குரல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் (எழிலன்) மீண்டும் ஒருமுறை கலகக்குரல் எழுப்பியிருக்கின்றார்.  தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்ற ‘எழுக தமிழ்’ பேரணியின் கூட்டத்தில் பெண் பிரதிநிதிகள் யாருக்கும் உரையாற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கவில்லை. 

Read More »

மு.க.ஸ்டாலினும் பிப்ரவரி 19-ம்! – புகழேந்தி தங்கராஜ்!

சந்தர்ப்பம் கிடைக்கிற போதெல்லாம் – ‘விரைவில் தி.மு.க. ஆட்சி’ – என்று அச்சுறுத்தியபடியே இருக்கிறார் மு.க. ஸ்டாலின். உச்சநீதிமன்றத் தீர்ப்பு வருகிறவரை கோபிநாத்தையே பின்னுக்குத் தள்ளிவிட்ட பன்னீர்செல்வம் – சசிகலாவின் நீயா நானாவுக்கு இடையே ஒலித்த தனி ஆவர்த்தனம் – தளபதியின் குரல்தான்! 8 ஆண்டுகளுக்கு முன் உயர்நீதிமன்ற வளாகம் ரத்தச் சேறாக்கப்பட்ட பிப்ரவரி 19 நெருங்குகிற நிலையில் ஸ்டாலின் இப்படியெல்லாம் பேசுவதைக் கேட்கும்போதே குலை நடுங்குகிறது. செவ்வாய்க்கிழமை வெளியான …

Read More »

சிறிலங்காவை விட்டு இந்தியாவை விலகச் சொல்லும் சீனா!

தென் சீனக் கடல் தனக்குச் சொந்தமானது என்றும், அமெரிக்கா அங்குள்ள தீவுகளை விட்டு விலகியிருக்க வேண்டும் என்றும் சீனா அறிவித்த, தற்போது,  இந்தியாவை அதன் கொலனியான சிறிலங்காவை விட்டு விலகியிருக்குமாறு கூறுவதன் மூலம், இந்திய மாக்கடலில் தனது செல்வாக்கை சீனா நிலைநிறுத்தி வருகிறது.

Read More »

யார் இந்த தீபா?.. இது தேவையா ஓ.பன்னீர்செல்வம்?

இக்கட்டான சூழல், எந்த இடத்திலிருந்து ஆதரவு வந்தாலும் அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டிய நிலையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். அந்த வகையில் தீபாவை அவரே வலியப் போய் வழியில் சந்தித்து வீட்டுக்கு அழைத்து வந்தார். முதல்வரின் குடும்பமே மிக பவ்யமாக வெளியே வந்து தீபாவுக்கு ஆரத்தி எல்லாம் எடுத்து வீட்டுக்குள் அழைத்துச் சென்ற கண்கொள்ளா காட்சியை பார்த்தபோது ஏற்பட்ட கடுப்பு இருக்கே…

Read More »

மீண்டும் எட்டிப்பார்க்கும் யுத்த தேவதை!

சிறிலங்காவின் அதிபராகப் பதவி வகித்தவரும் தற்போது தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் தலைவருமான சந்திரிக்கா குமாரதுங்கவுடனான அண்மைய நேர்காணல் தொடர்பாகத்  சிறிலங்காவைச் சேர்ந்த அவதானிப்பாளர்கள் தற்போது உரையாடி வருகின்றனர்.

Read More »

இலங்கையின் மோசடியும், ஜெ கொடுத்த பதிலடியும் – புகழேந்தி தங்கராஜ்

இலங்கையில் மீண்டும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பான மக்கள் கருத்தை அறிய மூத்த வழக்கறிஞர் சகோதரி மனோரி தலைமையில் குழு அமைக்கப்பட்டதற்கு மக்களின் கருத்தைக் காட்டி சர்வதேசத்தின் முகத்தில் கரிபூச வேண்டும் என்பதே பிரதான நோக்கம். நல்லிணக்கத்தைக் குறித்து மீண்டும் மீண்டும் பேசுவதன்மூலம் போர்க்குற்ற விசாரணையை மூடி மறைத்துவிட முடியும் – என்கிற மைத்திரி – ரணில் – சந்திரிகா கோஷ்டியின் நம்பிக்கைதான் அதற்கு அடிப்படை! அந்த மூடநம்பிக்கையைத் தகர்த்து அவர்கள் …

Read More »

கேப்பாபுலவு போராட்டக்களம் வலியுறுத்தும் பாடம்!

தமிழ் மக்களுக்கும் போராட்டங்களுக்கும் இடையில் அறுக்கவே முடியாத பெரும் பிணைப்பு உண்டு. உரிமைகளுக்காகவும் நீதிக்காகவும் குரல் எழுப்புகின்ற எந்தச் சனக்கூட்டத்துக்கும் போராட்டங்கள் தொடர்பிலான பிணைப்பு அடிப்படையானது; அறுக்கவே முடியாதது.

Read More »

கிழக்கின் உணர்வுகளை புரிதலிலேயே தாயக விடுதலைதங்கியிருக்கிறது

வெள்ளைநிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ வள்ளலடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ? வெள்ளைநிறப்பூலுமல்ல வேறெந்த மலருமல்ல உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது! – விபுலானந்தர் ஒரு மண்ணின் மாண்பு ,  மொழியின் அடியாழம் ,அதன் பழக்கவழக்கங்கள், உயரிய பண்புகள், இழப்புகள், ஈகைகள் எதுவென்றாலும், அதன் உண்மையின் உள்ளடக்கம் அம்மண் மாந்தரின் தொன்ம வாழ்வியலிருந்து வெளிப்படும் இலக்கியங்களில் எதிரொளி(லி)க்கும். மேற்சொன்ன பாடலின் வரிகள்  வெறும் வரிகள் அன்று. கடவுள் என்றாலும் மனிதன் என்றாலும் அந்த …

Read More »

வடமாகாண சபையால் போர்க்குற்ற விசாரணைகளை நடாத்த முடியுமா?

 “பன்னாட்டு சட்ட நிபுணர்களையும் நீதிபதிகளையும் வரவழைத்து வட மாகாண சபையே போர்க்குற்ற விசாரணையை நடாத்த முடியுமா? என்று ஆராயுங்கள். சட்ட ஏற்பாடுகள் அதற்கு இடம் கொடுக்குமா? என்பதைக் கண்டறியுங்கள். எமது மக்கள் நீதி பெற வேண்டுமானால் இதுவே ஒரே வழி” இவ்வாறு கூறியிருக்கிறார் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன். மன்னார் வட்டக்கண்டல் படுகொலை நினைவு நிகழ்வில் கடந்த திங்கட்கிழமை உரையாற்றிய பொழுது அவர் மேற்கண்டவாறு கூறி இருக்கிறார். 32 ஆண்டுகளுக்கு முன் …

Read More »

ஜல்லிக்கட்டோடு ஓய்ந்துவிடுவோமா? – புகழேந்தி தங்கராஜ்

வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் நினைவு நிகழ்ச்சியில் சென்றவாரம் கலந்துகொண்டபோது பழைய (இளைய) நண்பர்கள் இருவரை மீண்டும் சந்திக்கிற வாய்ப்பு கிடைத்தது. இருவருமே 2009 ஜனவரி இறுதியில் கொளத்தூரில் முத்துக்குமார் திருவுடல் வைக்கப்பட்டிருந்த 3 நாளும் அகலாது அணுகாது அங்கேயே இருந்தவர்கள். (இருவரில் ஒருவர் இப்போது ஐ.டி. நிறுவனமொன்றில் முக்கியப் பொறுப்பில் இருக்கிறார்.) அவர்கள் இருவருடனும் பேசியதிலிருந்து ஒரு உண்மையை உணரமுடிந்தது. 2009ல் இனப்படுகொலைக்கு எதிராகப் போராடிய இளைஞர்களின் உணர்வு மரத்துவிடவுமில்லை அப்போதிருந்த …

Read More »
http://www.themesfreedownloader.com latest government jobs stock market tutorial