ஆசிய அபிவிருத்தி வங்கி உதவி

523 0

ADB1இலங்கையின் மின்சார வழங்கல் நிமித்தம் ஆசிய அபிவிருத்தி வங்கி 115 மில்லியன் டொலர்களை கடனாக வழங்கவுள்ளது.

அதன் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக மேலும் 3.8 மில்லியன் டொலர்கள் மானியமாகவும் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் 100 சதவீத மின்சார வழங்கலை உறுதிப்படுத்தவும், மின்சாரத்துறை சார்ந்த நம்பிக்கையை உறுத்திப்படுத்தவும் இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது.