மேதகு 70 என்னும் வாழும் சித்தாந்தம்.

1087 0

தேசியத்தலைவரின் சிந்தனையை அழித்து தமிழீழ விடுதலைப்போராட்டத்தை அழித்துவிட அல்லது நீர்த்துப்போகச் செய்ய எதிரிகளும் துரோகிகளும் கடும் பிரயத்தனம் செய்கின்றனர். தேசியத்தலைவரின் சிந்தனை உயிர்ப்புடன் இருக்கும் வரை எமது விடுதலைப்போராட்டத்தை எவராலும் நெருங்க முடியாது . எனவே தேசியத்தலைவரின் சிந்தனையை உலகெலாம் பரவச்செய்ய நாம் எடுக்கும் மிகப்பெரிய தமிழீழ விடுதலை நடவடிக்கைதான் மேதகு 70 என்னும் வாழும் சித்தாந்தம் இந்நடவடிக்கையை அனைத்துத் தமிழீழ விடுதலைச் செயற்பாட்டாளர்களும் முழுவீச்சுடன் இணைந்து மேற்கொள்ள வேண்டும் என அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம். இது ஒரு கொண்டாட்டம் அல்ல, ஒரு மாபெரும் சிந்தனைப் புரட்சிக்கு அடி அத்திவாரமிட்ட தமிழீழத்தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் நீண்ட படைநடப்பில் நாமும் இணைந்து கொள்கிறோம் என்ற போர்முரசம். ஆயுதங்கள் மௌனிக்கப் பட்டபோதும் மேதகு பிரபாகரன் சிந்தனை என்னும் போராயுதம் எம்மை வழிநடத்தி நின்று போராடும் என எதிரிகளிற்கும் துரோகிகளிற்கும் தமிழர்களின் புலிப்பண்போடு நிறைந்த சேனை விடுக்கும் சவால் முடிந்தால் மோதிப்பார்! தலைவனின் சிந்தனை உம்மை துவம்சம் செய்யும் .

அனைவரும் வாரீர்…