ரணில் இன்று வியட்நாம் செல்கிறார்.

262 0

தமது ஜப்பான் விஜயத்தை நிறைவு செய்து கொண்டு உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்கரமசிங்க இன்று வியட்நாம்கான விஜயத்தை மேற்கொள்கிறார்.

வியட்நாம் அரசின் அழைப்பை ஏற்றே பிரதமர் இந்த விஜயத்தை மேற்கொள்கிறார்.

அங்கு செல்லும் அவர், எதிர்வரும் 19ஆம் திகதி வரை தங்கு தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது வியட்நாம் பிரதமர் ன்குயென் க்ஷூவன் ஃபுக் (Nguyen Xuan Phuc) உள்ளிட்ட உயர்மட்ட அரச தலைவர்களை சந்திக்கவுள்ளார்.

இந்த சந்திப்புக்களின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகள் குறித்து கவனம் செலுத்துவதுடன், வர்த்தம் பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப துறைகளின் முதலீடுகள் குறித்தும் கலந்துறையாடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.