மஹிந்த தலைமையில் கூட்டம்

208 0

மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில், அவருக்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் ஒன்று நேற்று கொழும்பு 7 –விஜேராம மாவத்தையில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் இடம்பெற்றது.

இதில் ஒன்றிணைந்த எதிர்கட்சியாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மஹிந்த ஆதரவு தொழிற்சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது காலிமுகத்திடலில் இடம்பெறவுள்ள மஹிந்த ஆதரவு மேதின கூட்டம் குறித்து பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.