புதிய அரசியல் யாப்புக்கான திருத்தங்கள் – மஹிந்த அணி கையளிப்பு

180 0

புதிய அரசியல் யாப்புக்கான தங்களின் திருத்தங்களை, அரசியல் யாப்பு வழிநடத்தல் குழுவிடம் மஹிந்த அணி கையளித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் தலைமையில்; நேற்று அரசியல்யாப்பு வழிநடத்தல் குழு நாடாளுமன்றத்தில் கூடியது.

இதன்போது புதிய அரசியல் யாப்புக்கான தங்களது யோசனைகள் மற்றும் திருத்தங்கள் அடங்கிய அறிக்கை கையளிக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

அதேநேரம், அதிகாரப் பகிர்வு விடயத்தில் இணக்கப்பாடுக்கு வந்துள்ளதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.