நுவரெலியா ஹட்டனில் ஒருதொகை போதைப்பொருட்களுடன் 9 பேர் கைது (காணொளி)

283 0

நுவரெலியா ஹட்டனில் ஒருதொகை போதைப்பொருட்களுடன் நேற்று இரவு 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹட்டன் பிரதேசத்தில் குடாகம பகுதியை சேர்ந்த ஒன்பது பேர், ஹெரோயின் போதைப் பொருளுடன் மதுவரி திணைக்கள அதிகாரிகளினால் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹட்டன் மற்றும் குடாகம பிரதேசத்தில் நேற்று மாலை மதுவரிப் பரிசோதகர்கள் மேற்கொண்ட தேடுதலின்போது குறித்த 9 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றினை அடிப்படையாகக் கொண்டு சந்தேக நபர்களை சோதனையிட்டபோது, ஹெரோயின் போதைப் பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 4 பேர் விற்பனையாளர்கள் எனவும், 5 பேர் நுகர்வோர் எனவும் ஹட்டன் மதுவரி திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன்போது 645 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.