மட்டக்களப்பு மாவட்ட அரச அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பணிப்பாளர்களுக்கான கருத்தரங்கு(காணொளி)

286 0

மட்டக்களப்பு மாவட்ட அரச அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பணிப்பாளர்களுக்கான கருத்தரங்கு இன்று நடைபெற்றது.

நாடளாவிய ரீதியில் கிராம மட்ட இளம் தொழில் முயற்சியாளர்களின் தொழில் வாய்ப்பினை விருத்தி செய்யும் நோக்குடன், மட்டக்களப்பு மாவட்ட அரச அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பணிப்பாளர்களுக்கான கருத்தரங்கு இன்று நடைபெற்றது.

கைத்தொழில் சேவைகள் பணியகத்தினால், இளம் தொழில் முயற்சியாளர்களுக்கு தொழில் பயிற்சிகள் வழங்கப்பட்டு, அவர்களுக்கு தேசிய தர சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன.

இதற்கமைய யு.என்.டி.பி நிறுவனத்தின் நிதி அனுசரணையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இளம் தொழில் முயற்சியாளர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு, தெரிவு செய்யப்பட சிறந்த இளம் தொழில் முயற்சியாளர்களுக்கு தேசிய தர சான்றிதழ் வழங்குவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பணிப்பாளர்களுக்கு தெளிவு படுத்தும் ஒரு நாள் கருத்தரங்கு, கைத்தொழில் சேவைகள் பணியகத்தின் ஆலோசகர் தனுஷ்க பண்டார தலைமையில் நடைபெற்றது.

மட்டக்களப்பு கிறிஸ்தவ வாலிப சங்க மண்டபத்தில் இன்று நடைபெற்ற ஒருநாள் கருத்தரங்கில் மட்டக்களப்பு மாவட்ட அரச அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், உதவித் திட்டப் பணிப்பாளர்கள் மற்றும் கைத்தொழில் சேவைகள் பணியக உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.