மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த நிதி மானியங்கள் வழங்கும் நடவடிக்கைகள்(காணொளி)

263 0

மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த நிதி மானியங்கள் வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

துறைமுக நகர அபிவிருத்தி செயற்றிட்டத்தின் ஊடாக மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக நிதி மானியங்களை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

துறைமுக நகர அபிவிருத்தி செயற்றிட்டத்தை நிர்மாணிப்பதற்காக மணல் அகழப்படும் இடங்களில், முருங்கை கற்பாறைகள் மற்றும் கடலுயிர்களின் இனவிருத்தி வலயங்கள் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் அண்மையில் குற்றம் சுமத்தியிருந்தனர்.

எனினும், நாரா நிறுவனம் மேற்கொண்ட ஆய்வுகளின்படி குறி;த்த பிரதேசங்களின் கடலுயிர்களின் இனவிருத்திக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது.

இந்நிலையில், குறிப்பிடத்தக்க பிரதேசங்களில் முருங்கைக் கற்களோ வேறு கற்பாறைகளே இல்லை என உறுதி செய்து மீன்பிடித்துறை அமைச்சு அண்மையில் தகவல் வெளியிட்டுள்ளது.

எனினும் எந்தவொரு மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்திற்கேனும் இதனூடாக பாதிப்பு ஏற்படுமாயின், அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்குரிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என மீன்பிடித்துறை அமைச்சினால், துறைமுக நகர அபிவிருத்தி அமைச்சிடம் கோரப்பட்டிருந்தது.

இந்நிலையில் துறைமுக நகர அபிவிருத்தி செயற்றிட்டத்தின் ஊடாக மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக நிதி மானியங்களை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.