கேப்பாப்புலவில் போராட்டத்தில் ஈடுபட்ட தாயொருவர் மயங்கி விழுந்து காயம்

210 0

காணி மீட்புக்காக கேப்பாப்புலவு மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று 34 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.

138 குடும்பங்களுக்கு சொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்க கோரி இராணுவ முகாமுக்கு முன்னால் தகரக்கொட்டகை அமைத்து இந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் காணிகளை மீட்கும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட தாயொருவர் இன்று தமது அன்றாட கடமைகளை மேற்கொள்ளும் போது மயங்கி விழுந்துள்ளார்.இதன் காரணமாக அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயர் இரத்த அழுத்தம் காரணமாகவே இவ்வாறு மயக்க நிலை ஏற்பட்டுள்ளது என குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை குறித்த பெண்ணிற்கு ஏற்கனவே உயர் இரத்த அழுத்தம் இருப்பது கண்டறியப்பட்டு, வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இதேவேளை, குறித்த பெண் தொடர்ந்தும் 65 நாட்களாக கேப்பாபுலவில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.