போத்தலால் தாக்கியவரை யாழ் பொலீசார் விடுதலை செய்தமைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

227 0
கலட்டி விடுதியில் இடம்பெற்ற பிறந்தநாள் நிகழ்வில் புகைப்படப்பிடிப்பாளர் மீது மேற்கொண்ட போத்தல்  தாக்குதலில் படப்பிடிப்பாளர்  படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும்  தாக்குதல் நடாத்தியவர்களைப் பொலிசார் விடுவித்தமையினால்
பொலீசார் மீது அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த முதலாம் திகதி இரவு  யாழ். கலட்டி பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் இடம்பெற்ற பிறந்தநாள் விருந்தொன்றின் போது வீடியோ படப்பிடிப்பாளர் ஒருவர் மீது, மது போதையில் வந்த ஒருவர் போத்தாதலால் தாக்குதல் நடத்தியுள்ளார். தாக்குதலை அடுத்து மயக்கமுற்ற  வீடியோ படப்பிடிப்பாளர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். படுகாயமடைந்தவர்  வைத்தியசாலையை விட்டு வீடு திரும்புவதற்கு முன்னர், தாக்கியவர் பொலீசாரால் விடுதலை செய்யப்பட்டுள்ளார் .
அதாவது போத்தலால் தாக்கியவர் நேற்று முன்தினம்  காலை யாழ்ப்பாணம் பொலீசாரால் கைது செய்யப்பட்ட போதிலும் மாலையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவத்தினில்  பாதிக்கப்பட்டவர் தொடர்ந்தும்  வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற போது தாக்குதலை நடாத்தினார் என்று உறுதிப்படுத்தப்பட்ட ஒரு சந்தேக நபரை பொலீசார்  விடுதலை விடுதலை செய்தமையானது  பாதிக்கப்பட்டவர்கள் பொலீசார் மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இது  தொடர்பாக பொலீஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருப்பதாக சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் வீடியோ படப்பிடிப்பாளரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்