கோடி ரூபாவைக் கடத்த முயன்ற சீனர் கைது

Posted by - December 9, 2017

பெருமளவு வெளிநாட்டு நாணயத் தாள்களை வெளிநாட்டுக்கு சட்டவிரோதமாகக் கொண்டு செல்ல முயன்ற சீனப் பிரஜை ஒருவரை சுங்கத் துறையினர் இன்று தடுத்து வைத்தனர். 25 வயது நிறைந்த இந்தப் பிரயாணி சிங்கப்பூர் செல்லும் விமானத்தில் பயணம் செய்ய ஏற்பாடாகியிருந்தது. எனினும் அவரது பயணப் பொதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு இலட்சம் சிங்கப்பூர் டொலர்கள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இலங்கை மதிப்பில் இதன் பெறுமதி சுமார் ஒரு கோடியே பதினைந்து இலட்ச ரூபாவாகும்.

மக்களை அணிதிரட்ட உள்ளோம்’- ஜே.வி.பி

Posted by - December 9, 2017

“மக்கள் விடுதலை முன்னனியினர், இலஞ்ச ஊழல் மோசடிகளுக்கு எதிராக மக்களை அணிதிரட்ட உள்ளோம்” என, மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினரான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று

Posted by - December 9, 2017

நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தினால் 2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் கடந்த 9ஆம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இன்றைய தினம் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது சபையில் பிரசன்னமாகியிருக்க வேண்டுமென பணிக்கப்பட்டுள்ளதாக தகவலால் தெரிவிக்கின்றன.

யாழில் நடைபெறவிருந்த தேசிய மீலாத் விழா நிகழ்வு ஒத்திவைப்பு

Posted by - December 9, 2017

2017ஆம் வருடத்துக்கான தேசிய மீலாத் விழா தவிர்க்க முடியாத காரணத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஆர்.எம்.மலிக் தெரிவித்துள்ளார். இவ்வருட தேசிய மீலாத் விழாவை அரசாங்கம் ஜனாதிபதியின் தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடாத்தத் திட்டமிட்டு, அதன்படி எதிர் வரும் 18ஆம் திகதி நடாத்தச் சகல ஏற்பாடுகளையும் திணைக்களமும், ஏற்பாட்டுக் குழுவினரும் மேற்கொண்டு வரும் நிலையிலேயே, மறு அறிவித்தல் வரும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பின் பிளவு ; மக்கள் மத்தியில் அதிருப்தி-அனந்தி சசிதரன்

Posted by - December 9, 2017

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஏற்பட்டிருக்கும் குழப்பமான சூழல் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கின்றது என வடமாகாண மகளீர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற வறுமை நிலையில் உள்ள மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைக்கும் நிகழ்வின் பின் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். “கூட்டமைப்பில் தற்போது ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகள் அனைத்தையும் அமைதியாக இருந்து அவதானித்துக்கொண்டு இருக்கின்றேன். இப்போதைய குழப்பமான சூழல் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கின்றது

ஹம்பாந்தோட்ட துறைமுக உடன்படிக்கை நிறைவேற்றம், பணிகளும் இன்று ஆரம்பம்

Posted by - December 9, 2017

ஹம்பாந்தோட்ட துறைமுகத்தின் நடவடிக்கைகளை சீன துறைமுகத்துக்கு வழங்குவதற்கான உடன்படிக்கை தொடர்பில் நேற்று (08) பாராளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பில் 65 மேலதிக வாக்குகள் கிடைக்கப் பெற்றுள்ளதுடன் அதற்கான பணிகள் இன்று (09) ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த உடன்படிக்கைக்கு ஆதரவாக 72 வாக்குகளும் எதிராக 7 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. மக்கள் விடுதலை முன்னணியுடன் கூட்டு எதிர்க் கட்சியின் இந்திக அனுருத்த மற்றும் விஜித பேரகொட ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிராக வாக்களித்துள்ளனர். உடன்படிக்கைக்கு எதிராக பாராளுமன்றத்தில் பேசிய தினேஷ் குணவர்தன வாக்களிப்பில் கலந்துகொள்ளாது வெளிநடப்புச் செய்துள்ளார்.

850 பிக்குகளுக்கு பிரதமர் 40 கோடி ரூபா பணம் வழங்கியது தவறு- பொங்கமுவ தேரர்

Posted by - December 9, 2017

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 850 பிக்குகளை அலரி மாளிகைக்கு அழைத்து அவர்களுக்கு பணம் வழங்கியது தவறான ஒரு நடவடிக்கை என தேசிய உரிமைகளுக்கான அமைப்பின் தலைவர் பொங்கமுவே நாலக்க தேரர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் நாட்களில் தேர்தல் ஒன்றை எதிர்நோக்கியுள்ள நிலையில் இவ்வாறு தேரர்களை அழைத்து அவசரமாக அரசாங்கம் ஏன் நிதி வழங்கியது.  இதற்காக 40 கோடி ரூபாவை அரசாங்கம் செலவிட்டுள்ளது. இந்த நிதி முறையற்ற பயன்பாடு அல்லவா? எனவும் நாரஹேன்பிட்டி அபயராம விகாரையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்

இனந்தெரியாத இளைஞனின் சடலம் மீட்பு

Posted by - December 9, 2017

குருநாகல் – தம்புள்ள பிரதான வீதியிலுள்ள தலகிரியாகம பாதை அருகில் வைத்து இளைஞன் ஒருவரின் சடலம் இன்று அதிகாலை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட சடலம் 25 – 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவருடையது எனவும் இவரின் தலை, முகம் மற்றும் பாதங்கள் என்பவற்றில் பாரிய காயங்கள் காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

செக் குடியரசின் பெண் ஒருவர் கொழும்பில் கைது

Posted by - December 9, 2017

செக் குடியரசின் பிரஜையொருவர் கொழும்பு கோட்டை கெனல் வீதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வீசா காலம் முடிவடைந்தபின்னர் சட்டவிரோதமாக தங்கியிருந்த குற்றச்சாட்டின் பேரில் பெண் ஒருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ள இந்த வெளிநாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சேவைக்கு சமூகமளிக்காவிடின், பணியில் இருந்து விலகியவர்களாக கருதப்படுவர்

Posted by - December 9, 2017

புகையிரத சேவையாளர்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்ந்தால், போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளவர்கள் பணியில் இருந்து விலகியவர்களாக கருதப்படுவர் என போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். புகையிரத சேவையாளர்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்பிலான கலந்துரையாடலொன்று இன்று போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் இடம்பெற்றது. இதனையடுத்து இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் குறித்த அறிவிப்பை விடுத்துள்ளார். புகையிரத சேவையை அத்தியவசிய சேவையாக மாற்றி ஜனாதிபதியின் கையொப்பத்துடன் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.