2017ஆம் வருடத்துக்கான தேசிய மீலாத் விழா தவிர்க்க முடியாத காரணத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஆர்.எம்.மலிக் தெரிவித்துள்ளார்.
இவ்வருட தேசிய மீலாத் விழாவை அரசாங்கம் ஜனாதிபதியின் தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடாத்தத் திட்டமிட்டு, அதன்படி எதிர் வரும் 18ஆம் திகதி நடாத்தச் சகல ஏற்பாடுகளையும் திணைக்களமும், ஏற்பாட்டுக் குழுவினரும் மேற்கொண்டு வரும் நிலையிலேயே, மறு அறிவித்தல் வரும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

