ஹம்பாந்தோட்ட துறைமுக உடன்படிக்கை நிறைவேற்றம், பணிகளும் இன்று ஆரம்பம்

538 6

ஹம்பாந்தோட்ட துறைமுகத்தின் நடவடிக்கைகளை சீன துறைமுகத்துக்கு வழங்குவதற்கான உடன்படிக்கை தொடர்பில் நேற்று (08) பாராளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பில் 65 மேலதிக வாக்குகள் கிடைக்கப் பெற்றுள்ளதுடன் அதற்கான பணிகள் இன்று (09) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த உடன்படிக்கைக்கு ஆதரவாக 72 வாக்குகளும் எதிராக 7 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

மக்கள் விடுதலை முன்னணியுடன் கூட்டு எதிர்க் கட்சியின் இந்திக அனுருத்த மற்றும் விஜித பேரகொட ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிராக வாக்களித்துள்ளனர்.

உடன்படிக்கைக்கு எதிராக பாராளுமன்றத்தில் பேசிய தினேஷ் குணவர்தன வாக்களிப்பில் கலந்துகொள்ளாது வெளிநடப்புச் செய்துள்ளார்.

இதேவேளை, ஹம்பாந்தோட்ட துறைமுகத்தின் செயற்பாடுகள் இன்று (9) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. இதற்கான நிகழ்வு பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இந்நிகழ்வில் சீன தூதுவரும் கலந்துகொண்டுள்ளார்.

இலங்கை துறைமுக அதிகார சபை, இலங்கை அரசு, சீனாவின் வரையறுக்கப்பட்ட ‘மேர்ச்சண்ட்ஸ் போர்ட் ஹோல்டிங்ஸ்’ நிறுவனம், அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக குழுமம் மற்றும் அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக சேவைகள் நிறுவனம் என்பன இணைந்து அம்பாந்தோட்டை துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment