சர்வதேச மனிதவுரிமை நாளை முன்னிட்டு யேர்மனியில் நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வு

Posted by - December 11, 2017

சர்வதேச மனிதவுரிமை நாளை முன்னிட்டு ஈழத்தமிழர்களுக்கு நடைபெற்ற/நடைபெற்றுக்கொண்டிருக்கும் இனவழிப்பு மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக சர்வதேச நீதி கோரும் கவனயீர்ப்பு நிகழ்வு யேர்மன் தலைநகரில் நடைபெற்றது. கடும் குளிரையும் கவனத்தில் கொள்ளாது தாயக உறவுகளுக்காக நீதி கோரி பல்லின மக்களிடம் தமது கவனத்தை கொண்டுசென்றதோடு, தமிழ் இளையோர் அமைப்பு உறுப்பினர்களால் விளக்கங்களும் கொடுக்கப்பட்டது.கடந்த வெள்ளிக்கிழமை சர்வதேச பொதுமன்னிப்புச்சபை அமைப்பில் பாரிய அளவில் பிரதி எடுக்கப்பட்டு கண்காட்சிக்கு வைக்கப்பட்ட மனிதவுரிமை சாசனத்துக்கு முன்பாகவும் “146679 ஈழத்தமிழர்களுக்கு என்ன நடந்தது”

தீர்வுகள்தராத தினமேன்?

Posted by - December 11, 2017

தீர்வுகள்தராத தினமேன்? ————————————— தினமொரு தினம் வைத்துத் தீர்வுகள் ஏதுமின்றிக் கண்ணாடி மாளிகையில் காகிதத் தீர்வுக்காய்க் கூடிக் கலைகின்ற ஐநாவே உனக்குத் தெரியாது உயிரடங்கும் வேதனைகள்! வேதனைகள் சுமந்தபடி உலகின் மூலை முடுக்கெல்லாம் அலைகின்ற மாந்தரினம் அடிப்படை உரிமைக்காய் அன்றாடம் பிணமாகி அலைக்கழிந்து வீழ்கின்ற அவலநிலை தொடர்கையிலே நீயேன் இருக்கின்றாய் ஐநாவே! உனக்கு எதற்காகத் தினங்களென உரிமையற்ற மாந்தர்கள் உரத்துக் கேட்பது உனக்குப் புரியாது காற்றுக்கூடப் புகாத கண்ணாடி மாளிகையில் கழுத்துப்பட்டியுடன் அமர்ந்து குளிரூட்டிக் காற்றுவர குளிர்பாணம்

ஆவா குழுவைச் சேர்ந்த மேலும் நால்வர் கைது

Posted by - December 11, 2017

ஆவா குழுவைச் சேர்ந்த பிரதான சந்தேகநபர்கள் நால்வர் நேற்று இரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர். மானிப்பாய் மற்றும் தெல்லிப்பனை ஆகிய பகுதிகளில் சிலருக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய, மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போதே அவர்கள் கைதாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இவர்கள் வசம் இருந்து நான்கு வாள்கள், மோட்டார் சைக்கிள்கள் நான்கு உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேகநபர்கள் கொள்ளை மற்றும் நபர்களை அச்சுறுத்திய சம்பங்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்தவர்கள் என பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. மேலும்,

விமலது கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் இருவர் கட்சி தாவல்

Posted by - December 11, 2017

தேசிய விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள் இருவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சற்று முன்னர் சந்தித்துள்ளனர். 

ஓய்வு பெற்ற ஊழியர்கள் பணிக்கு மீள அழைப்பு!

Posted by - December 11, 2017

ஓய்வு பெற்ற, சேவையாற்ற விரும்பும் ரயில்வே ஊழியர்களை இலங்கை ரயில்வே தலைமையகத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் விஜய சமரசிங்க தெரிவிக்கின்றார்.

பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு கல்வி அமைச்சரின் கோரிக்கை.!

Posted by - December 11, 2017

ரயில்வே சேவையாளர்களின் வேலை நிறுத்தத்தால் ரயில் சேவைகள் முடங்கிப் போயுள்ள நிலையில், ரயில்களில் பயணிக்கும் மாணவர்கள் மாற்று போக்குவரத்து சேவைகளை பயன்படுத்தும்படி கல்வி அமைச்சர் கோரியுள்ளார்.

இளம் யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!

Posted by - December 11, 2017

நெடுங்கேணி பளம்பாசிப்பகுதியில் இளம் யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.  நேற்று காலை குறித்தயுவதி தனது வீட்டில் தூக்கிட்ட நிலையில் உடலமாக மீட்கப்பட்டுள்ளார். பளம்பாசியினை சேர்ந்த 20 அகவையுடைய யோகானந்தராசா கம்சிகா என்ற யுவதியே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சம்பவம் அறிந்து குறித்த பகுதிக்கு விரைந்த ஒட்டுசுட்டான் பொலீஸார் உடலத்தை மீட்டு மாவட்ட மருத்துவ மனைக்கு கொண்டு சென்றுள்ளார்கள். மருத்துவமனையில் சட்டமருத்துவரின் மரணவிசாரணை அறிக்கையின் பின்னர் நேற்று மாலை உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்த யுவதியின்

முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தில் அக்கறையாக செயற்படவில்லை – எம்.ஏ.சுமந்திரன்

Posted by - December 11, 2017

வடக்கிலிருந்து அநியாயமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தில் நாம் அக்கறையாக செயற்படவில்லை,இது துரதிஸ்ர வசமானது என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். சிங்களவர்கள் எமக்கு அநீதி இழைப்பதாக தமிழர் தரப்பு தெரிவித்துக் கொண்டு எம்மை விட சிறுபான்மையினரான முஸ்லிம்களுக்கு தமிழர்கள் அநீதி இழைக்கும் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன எனவும் அவர் தெரிவித்திருப்பதுடன் அந்நிலை மாற்றப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்றையதினம் இடம்பெற்ற தமிழ் முஸ்லிம் ஐக்கிய மாநாட்டில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

காணாமல் போன இலங்கை மீனவர்கள் ஈரான் அரசின் பாதுகாப்பில்

Posted by - December 11, 2017

கடந்த சில நாட்களாக நிலவிய  சீரற்ற காலநிலை காரணமாக காணாமல் போன  இலங்கை மீனவர்கள் ஐவர் ஈரான் அரசின் பாதுகாப்பில் உள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த ஐந்து மீனவர்களையும் விமானத்தின் மூலம் நாட்டுக்கு அழைத்துவரத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த 29 ஆம் திகதி பிற்பகல் முதல் சில நாட்கள் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக, ஐவர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிக்கையொன்றை வௌியிட்டது. கடந்த ஒக்டோபர் 10 ஆம் திகதி இவர்கள் மிரிஸ்ஸ

மஹிந்தவுடன் இருந்த மற்றுமொரு எம்.பி. மைத்திரியுடன் இணைவு

Posted by - December 11, 2017

மஹிந்த ராஜபக்ஷ ஆதரவு கூட்டு எதிர்க் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவின் கட்சியைச் சேர்ந்த ஸ்ரீயானி விஜேவிக்ரம நேற்று மாலை (10) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளார். நேற்று (10) மாலை ஜனாதிபதியை சந்தி அவர், ஜனாதிபதிக்கு தனது ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளார். இவர் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆவார்.