நெடுங்கேணி பளம்பாசிப்பகுதியில் இளம் யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
நேற்று காலை குறித்தயுவதி தனது வீட்டில் தூக்கிட்ட நிலையில் உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பளம்பாசியினை சேர்ந்த 20 அகவையுடைய யோகானந்தராசா கம்சிகா என்ற யுவதியே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவம் அறிந்து குறித்த பகுதிக்கு விரைந்த ஒட்டுசுட்டான் பொலீஸார் உடலத்தை மீட்டு மாவட்ட மருத்துவ மனைக்கு கொண்டு சென்றுள்ளார்கள்.
மருத்துவமனையில் சட்டமருத்துவரின் மரணவிசாரணை அறிக்கையின் பின்னர் நேற்று மாலை உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த யுவதியின் தற்கொலை சம்பவம் குறித்து ஒட்டுசுட்டான் பொலீஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

