மன்னாரில் போட்டியிட சிறிலங்கா பொதுஜன பெரமுன இன்று கட்டுப்பணத்தை செலுத்தியது

Posted by - December 11, 2017

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக ‘சிறிலங்கா பொதுஜன பெரமுன’ கட்சி இன்று  மாலை 3 மணியளவில் மன்னார் தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது. ‘சிறிலங்கா பொதுஜன பெரமுன’ கட்சியின் வடமாகாணத்திற்கான அமைப்பாளரும், வடமத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சருமான எஸ்.எம்.ரஞ்சித் சமரகோண் தலைமையில் மன்னார் தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. இதன் போது கட்சியின் வடமாகாண சபை உறுப்பினர் தர்மபால, மன்னார் நகர சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.டிலான், மன்னார் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்

வறட்சி காரணமாக 3 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு

Posted by - December 11, 2017

நிலவும் வறட்சியுடனான காலநிலை காரணமாக 6 மாவட்டங்களை சேர்ந்த 339,666 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. புத்தளம், குருநாகல், அநுராதபுரம், முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் குறித்த மாவட்டங்களில் புத்தளம் மாவட்டமே அதிக பாதிப்புக்குள்ளாகி இருப்பதாகவும் அங்கு 67,095 குடும்பங்களை சேர்ந்த 217,062 மக்கள் பாதிக்கப்பட்ட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

தேசிய சுதந்திர முன்னணி முக்கியஸ்தர்கள் மூவர் சுதந்திரக் கட்சியில் இணைவு

Posted by - December 11, 2017

தேசிய சுதந்திர முன்னணியின் பிரதித் தலைவர் வீரகுமார திசாநாயக்க, தேசிய அமைப்பாளர் பியசிறி விஜேநாயக்க மற்றும் வடமத்திய மாகாண சபை உறுப்பினர் பி.பீ. குமார ஆகியோர் இன்று (11) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையை பெற்றுக்கொண்டனர். இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியை சந்தித்த இவர்கள் நாட்டை கட்டியெழுப்புவதற்காக ஜனாதிபதி முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்துகொண்டுள்ளதுடன், எதிர்வரும்  உள்ளுராட்சி தேர்தலில் ஸ்ரீ

ஆறுமுகன் தொண்டமானின் புதல்வரை கைது செய்யுமாறு உத்தரவு

Posted by - December 11, 2017

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் புதல்வாரன ஜீவன் ஆறுமுகனை கைது செய்யுமாறு ஹட்டன் நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் மஸ்கெலிய சாமிமலை ஓல்ட்டன் பகுதியில் மரண வீடொன்றில் வைத்து இலங்கை தொழிலாளர் காங்கிரசின் ஆதரவாளர்களுக்கும் தேசிய தொழிலாளர் சங்கத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையில் மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது திகாம்பரத்தின் ஆதரவாளர் ஒருவர் தாக்குதலுக்கு இலக்கான நிலையில், கிளங்கன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக

அமெரிக்க தூதரக பாதுகாப்பு ஆலோசகர் – இராணுவத் தளபதி சந்திப்பு

Posted by - December 11, 2017

இலங்கையில் அமைந்துள்ள அமெரிக்க தூதுவராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேர்ணல் டக்லஸ் ஹேஸ் மற்றும் இராணுவத் தளபதி மஹேஷ் சேனாநாயக்க ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இன்று காலை இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்றது. குறித்த சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் சந்திப்பின் இறுதியில் நினைவுச்சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன. குறித்த சந்திப்பில் இராணுவப்படையின் பயிற்சி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

தேர்தல் சட்டம் இன்று முதல் அமுல், O/L பரீட்சைக்கு இடைஞ்சல் செய்வது குற்றம்-ருவன் குணசேகர

Posted by - December 11, 2017

உள்ளுராட்சி சபைத் தேர்தல்கள் தொடர்பான சட்டங்கள் அனைத்தும் இன்று (11) முதல் நடைமுறைக்கு வருவதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். பொலிஸ் தேர்தல் செயலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். தேர்தல் சட்டங்களை மீறுவோர் தொடர்பில் நேரடியாகவும் சட்டமா அதிபரின் ஆலோசனையின் கீழும் வழக்குத் தொடரப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாளை ஆரம்பமாகும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு எந்தவகையிலும் இடைஞ்சலாக செயற்பட

குற்றச்செயல்களில் ஈடுப்பட்டவர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும்

Posted by - December 11, 2017

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் தெரிவின்போது குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளவர்ள் மற்றும் தொடர்புடையவர்களை உள்வாங்க வேண்டாம்

தேங்காய், பருப்பு கருவாடு அதிக விலைக்கு விற்பனை: 353 பேருக்கு சிக்கல்

Posted by - December 11, 2017

கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக தேங்காய், பருப்பு மற்றும் கருவாடுகளை விற்பனை செய்த 353 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக, நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. 

டொரன்டோ தமிழ் போலீஸ் அதிகாரி – ரொஷான் நல்லரட்ணம் அரசியலில் குதித்தார்

Posted by - December 11, 2017

கனேடிய தமிழர்கள் மத்தியில் டோரன்றோ காவல்த்துறை அதிகாரியாக கடந்த 10 வருடங்களாக கடமையாற்றி வந்த – பல்லின மக்களாலும் நன்கு அறியப்பட்ட ரொஷான் நல்லரட்ணம் கனேடிய கன்சர்வேர்டிவ் கடைசியில் மார்கம் தோரன்கில் தொகுதியில் 2018 ல் வரவுள்ள தேர்தலில் களமிறங்கியுள்ளார்.

மரை இறைச்சி 150 கிலோவுடன் ஒருவர் கைது!

Posted by - December 11, 2017

நுவரெலியா பொரலந்த பகுதியில் மரை இறைச்சி 150 கிலோவை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஐம்பதாயிரம் ரூபாய் அபராதம் விதித்து நுவரெலியா நீதிமன்ற நீதவான் ருவான் இந்திக்க டீ சில்வா இன்று (11) உத்தரவிட்டார்.